யாஷிகா ஆனந்த் அண்மையில் ரசிகர்களுடன் நேரடியாக சமூகவலைதளங்களில் உரையாடினார். அப்போது, அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு வெளிப்படையாக பதில் அளித்தார். பிக்பாஸ் வைல்டு கார்டு என்டிரி குறித்து ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும்போது, பிக்பாஸ் அல்டிமேட்டில் பங்கேற்க அழைப்பு வந்ததாக தெரிவித்தார். ஆனால், உடல்நிலையைக் கருத்தில் கொண்டு தான் அதில் பங்கேற்க விரும்பவில்லை எனக் கூறிவிட்டதாகவும் யாஷிகா கூறினார்.
மேலும் படிக்க | அரபிக் குத்து பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ராஷ்மிகா! வைரலாகும் வீடியோ!
"ஆம், என்னை பிக் பாஸ் அல்டிமெட்டில் கலந்துகொள்ள அழைப்பு வந்தது. ஆனால், என்னால் பழையபடி டாஸ்க் பண்ண முடியாது. மேலும், நான் 18 வயசு இருக்கும்போது, பிக் பாஸுக்கு போனேன். இனி நான் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. எந்த லவ் ஸ்டோரியிலும் சிக்கிக் கொள்ள விரும்பவில்லை" என்று கூறியுள்ளார். பைக் ரைடிங் குறித்து மற்றொரு ரசிகர் கேள்வி எழுப்பினார். உங்களிடம் ராயல் என்ஃபீல்டு பைக் ஒன்று இருந்ததே, அது இன்னும் இருக்கிறதா? என கேட்டார்,.
அவரின் கேள்விக்கு பதில் அளித்த யாஷிகா, "அந்த பைக் இன்னும் எங்களிடம் இருக்கிறது. என் சகோதரன் பயன்படுத்திக் கொண்டிருக்கிறான். ஆனால், இனிமேல் நான் பைக் மற்றும் கார்களை ஓட்ட விரும்பவில்லை. அதனை முழுமையாக விட்டுவிட்டேன்" எனத் தெரிவித்துள்ளார். யாஷிகா ஆனந்த் மற்றும் அவருடைய நண்பர்கள் மாமல்லபுரம் சென்றும் திரும்பும்போது, அவர்களுடைய கார் மிகப்பெரிய விபத்தில் சிக்கியது. இதில் படுகாயமடைந்த யாஷிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பெண் தோழி ஒருவர் நிகழ்விடத்திலேயே இறந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த விபத்தில் இருந்து மெதுவாக மீண்டு இயல்பு நிலைக்கு இப்போது தான் திரும்பியிருக்கிறார் யாஷிகா.
மேலும் படிக்க | பான் இந்தியா படத்தில் இணைந்த ஸ்ரேயா
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR