இணையத்தில் லீக் ஆன ஜவான் HD ப்ரிண்ட்.. அதிர்ச்சியில் படக்குழு!

Jawan Full HD Movie Leaked: ஷாருக்கானின் ஜவான் படம், திரையரங்கில் ரிலீசாகுவதற்கு முன்னாதே ஹெச்.டி. வடிவில் இணையத்தில் லீக் ஆகி இருப்பது படக்குழு மற்றும் தயாரிப்பு நிறுவனத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 7, 2023, 10:24 AM IST
  • ஜெயிலர், குஷி மற்றும் பிற படங்களும் பைரசியால் பாதிப்பு.
  • ஷாருக்கானின் பதான் படமும் வெளியீட்டிற்கு முன்னதாக ஆன்லைனில் கசிந்தது.
  • ஷாருக்கான் மொத்த வித்தையையும் இதில் இறக்கி மாஸ் காட்டியுள்ளார்.
இணையத்தில் லீக் ஆன ஜவான் HD ப்ரிண்ட்.. அதிர்ச்சியில் படக்குழு! title=

இணையத்தில் லீக் ஆன ஜவான் முழுத் திரைப்படம்: தமிழ் இயக்குநர் அட்லீ குமார் இயக்கத்தில் இன்று (செப்டம்பர் - 7 ஆம் தேதி) தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ள படம், ஜவான். இந்த திரைப்படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடித்துள்ளார், மேலும் இதில், அவருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். விஜய் சேதுபதி இதில் வில்லனாக வருகிறார். இவர்களுடன் இந்த திரைப்படத்தில் பிரியாமணி, சான்யா மல்கோத்ரா, சுனில் குரோவர், யோகி பாபு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். அதுமட்டுமின்றி பிரபல பாலிவுட் நாயகி தீபிகா படிகோன் ஜவான் படத்தில் கேமியோ கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அவர், இந்த படத்தில் நடிகர் ஷாருக்கானின் தாயாக வருகிறார் என்று கூறப்படுகிறது. அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.  மேலும் இந்த படத்தை ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது.

ஆக்‌ஷன், மாஸ், மிரட்டல், எமோஷன்:

இந்நிலைகயில் நடிகர் ஷாருக்கானை வைத்து பாலிவுட்டில் அட்லீ இயக்கி உள்ள ஜவான் படத்திற்கும் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. மக்களும் தங்களின் கருத்துக்களை டிவிட்டர் மூலம் பதிவிட்டு வருகின்றனர். அதன்படி இதுவரை நடித்திராத மிரட்டலான கெட்டப்பில் நடிகர் ஷாருக்கான் நடித்துள்ளதாக மக்கள் கூறி வருகின்றனர். மேலும் ஷாருக்கான் மொத்த வித்தையையும் இதில் இறக்கி மாஸ் காட்டியுள்ளதாக ரசிகர்கள் ஆரவாரம் செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க | Jawan Review: ஜவான் படம் எப்படி இருக்கு? டாப் ட்விட்டர் விமர்சனம் இதோ

பதான் சாதனையை முறியடிக்குமா ஜவான்?

இதனிடையே தற்போது ஜவான் படம் வெளியாகி சில மணி நேரத்திலேயே மக்களிடையே பெற்று வரவேற்பை பெற்று வருவதை பார்த்தால், ஜவான் படம் முதல்நாளிலேயே ரூ.100 கோடி வசூலை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஷாருக்கானின் பதான் படத்தைப்போல் இப்படமும் ரூ.1,000 கோடி வசூல் குவிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது 

இணையத்தில் லீக் ஆன ஜவான் "HD ப்ரிண்ட்" :

Filmibeat.com இன் அறிக்கையின்படி, ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் HD வடிவில் இணையதளத்தில் லீக் செய்யப்பட்டுள்ளது. பல அறிக்கைகளின்படி, தமிழ்ராக்கர்ஸ், டெலிகிராம் மற்றும் மூவிருல்ஸ் போன்ற தளங்களில் இந்த படம் லீக் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது ஜவான் படம் ஹெச்.டி. வடிவில் இணையத்தில் லீக் ஆகி இருப்பது படக்குழு மற்றும் தயாரிப்பு நிறுவனத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இதனை பார்த்த ரசிகர்கள் சிலர் உச்சகட்ட அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். ஏற்கனவே டிக்கெட் கிடைக்கவில்லை என்ற ஏமாற்றத்தில் இருக்கும் ரசிகர்கள், அவர்கள் படம் பார்ப்பதற்குள் அனைத்தையும் லீக் செய்து விடுவார்களோ என்ற அச்சத்தில் இருக்கின்றனர். எனவே இதுபோல காட்சிகளை யாரும் லீக் செய்து ரசிகர்களின் ஆர்வத்தை கெடுக்கவேண்டாம் என அவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ஜெயிலர், குஷி மற்றும் மற்ற படங்களுக்கும் பைரசியால் சிக்கல்:

பைரசியால் பாதிக்கப்பட்ட முதல் படம் இதுவல்ல. முன்னதாக நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம், அதேபோல் சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டாவின் குஷி ஆகிய படங்களும் ஆன்லைனில் கசிந்ததாக தகவல்கள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் இன்று முதல் உங்கள் வீட்டுத் திரையில்! அமேசான் ப்ரைம் வெளியீடு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News