லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருந்த லியோ படம் கேரளாவில் வசூல் மழை பொழிந்துள்ளது. இப்படம், அந்த மாநிலத்தில் மொத்தமாக செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?
லியோ திரைப்படம்:
லோகேஷ் கனகராஜ் உடன் இரண்டாவது முறையாக விஜய் கைக்கோர்த்த படம், லியோ. ஏற்கனவே மாஸ்டர் படம் மூலம் இருவரும் இணைந்து ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தனர்.தனது படங்களை வைத்து எல்.சி.யு எனும் யுனிவர்ஸை உருவாக்கிய லாேகி, லியோ படத்தையும் அதில் இணைத்துள்ளார். மேலும், இந்த படத்தில் விஜய்யுடன் தமிழ் திரையுலகின பல முன்னணி நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர்.
கேரளாவில் சக்கை போடு போட்ட லியோ..
லியோ படத்தை எதிர்பார்த்து தமிழ் ரசிகர்கள் மட்டுமல்ல, இந்திய திரையுலக ரசிகர்களுமே காத்திருந்தனர். நடிகர் விஜய்க்கு தமிழ்நாட்டை தாண்டி கேரளாவிலும் அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர். தமிழ் ஸ்டார் நடிகர்களின் படங்கள் வெளியாகிறது என்றால், அந்த ஊரில் ரிலீஸாகும் படங்கள் சில நாட்களுக்கு தள்ளி வைக்கப்படும். தமிழ் ரசிகர்கள் கொடுத்த வரவேற்பை போலவே விஜய்யின் லியோ படத்திற்கும் கேரள ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைதத்து.
மொத்த வசூல்..
லியோ படம், கடந்த அக்டோபர் மாதம் 19ஆம் தேதி வெளியானது. தமிழ்நாட்டை போலவே கேரளாவிலும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. லியோ படம் கேரளாவில் மட்டும் ரூ.60 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை கேரளாவில் அதிக வசூல் செய்த தமிழ் படங்களிலேயே லியோதான் டாப்பில் உள்ளதாக கூறப்படுகிறது. லியோ திரைப்படம், தமிழ் நாட்டில் மட்டும் ரூ.230 கோடி வரை கலெக்ட் செய்துள்ளதாம். கர்நாடகா, தெலங்கு மாநிலங்களில் 48.25 கோடிகளையும், கர்நாடகாவில் 42.25 கோடிகளையும் இப்படம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இது தவிர, இந்தியாவின் பிற மாநிலங்கலில் 41 கோடி ரூபாயும், வெளிநாடுகளில் ரூ.198.5 கோடி ரூபாய் வரை லியோ படம் வசூலித்துள்ளதாகவும் கூறப்படுறது. மொத்தமாக உலகளவில் ரூ.620.1 கோடி ரூபாய் வரை லியோ வசூல் செய்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க | ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள பார்க்கிங் படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!
ஓடிடியில் வெளியீடு..
லியோ திரைப்படம், இந்த மாதம் 24ஆம் தேதி பிரபல ஓடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸில் வெளியானது. 28ஆம் தேதியில் இருந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இப்படம் காண கிடைத்தது. தற்போது நெட்ஃப்ளிக்ஸில் ட்ரெண்டிங்கிள் இருக்கும் படங்களில் ‘லியோ’வும் ஒன்று.
தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய லோகேஷ் கனகராஜ்..
லியோ பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தற்போது சொந்தமாக தனது தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். அந்த நிறுவனத்திற்கு ஜி ஸ்குவாட் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது. முதல் படமாக ‘ஃபைட் க்ளப்’ என்ற படம் வெளியாக உள்ளது. தொடர்ந்து, தனது டீமில் உள்ளவர்கள் இயக்கும்-நடிக்கும் படங்களை லோகி தயாரித்து வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | மலைப்போல் குவியும் துட்டு.. ஏ.ஆர்.ரஹ்மானின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ