ஆஸ்கார் இறுதிப்பட்டியலில் இடம்பெற்ற RRR படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல்!

ஆஸ்கார் இறுதிப்பட்டியலுக்கு தகுதி பெற்ற முதல் தென்னிந்தியத் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது RRR திரைப்படம். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 24, 2023, 07:40 PM IST
  • சிறந்த பாடலுக்காக நாட்டு நாட்டு ஆஸ்கர் இறுதி பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
  • ஆல் தட் ப்ரீத்ஸ் பெருமையுடன் 15 திரைப்படங்களின் இறுதிப் பட்டியலில் இடம்பிடித்தது.
  • சுமார் 22 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்திய படங்கள்.
ஆஸ்கார் இறுதிப்பட்டியலில்  இடம்பெற்ற RRR படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல்!  title=

கடந்த காலங்களில் மதர் இந்தியா, சலாம் பாம்பே மற்றும் லகான் உள்ளிட்ட இந்திய படங்கள் ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் இடம்பெற்ற நிலையில், சுமார் 22 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்திய படங்கள் ஆஸ்கர் நாமினேஷனை எதிர்நோக்கி காத்திருக்கின்றன. இயக்குநர் ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படம், செல்லோ ஷோ, ஆல் தட் ப்ரீத்ஸ், தி எலிபேண்ட் விஸ்பரஸ் உள்ளிட்ட படங்கள் ஆஸ்கர் நாமினேஷனில் இடம்பெற போட்டியிட்டு வந்த நிலையில், சிறந்த பாடலுக்காக நாட்டு நாட்டு ஆஸ்கர் இறுதி பட்டியலில் இடம் பெற்றுள்ளது. 

ஆஸ்கார் இறுதிப்பட்டியலுக்கு தகுதி பெற்ற முதல் தென்னிந்தியத் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது RRR திரைப்படம். RRR பாடலான நாட்டு கூத்து பாடல் கோல்டன் குளோப்ஸில் 'சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான' விருதை பெற்று வரலாறு படைத்தது குறிப்பிடத்தக்கது 

மேலும் படிக்க: Oscar Nominations 2023: ஆஸ்கார் நாமினேஷன் பட்டியல்.. எப்போ? எங்கே? எப்படி?

சிறந்த ஆவணப்படத்திற்கான பிரிவில் ஆல் தட் ப்ரீத்ஸ்

ஷௌனக் சென் இயக்கிய இந்தப் படம், 95வது ஆஸ்கார் விருதுகளுக்கான ஆவணப்படத் திரைப்படப் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 144 திரைப்படங்கள் இந்தப் பிரிவில் தகுதி பெற்றன. மேலும் ஆல் தட் ப்ரீத்ஸ் பெருமையுடன் 15 திரைப்படங்களின் இறுதிப் பட்டியலில் இடம்பிடித்தது.

சிறந்த ஆவணப்பட குறும்படத்திற்கான தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்

திரைப்படத் தயாரிப்பாளர் கார்த்திகி கோன்சால்வ்ஸ் இயக்கிய இந்தப் படம், 95வது அகாடமி விருதுகளுக்கான ஆவணக் குறும்படப் பிரிவின் இறுதிப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இதயப்பூர்வமான இயற்கை ஆவணப்படம், ‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ OTT இல் பார்க்கக் கிடைக்கிறது.

சிறந்த ஒலிக்கான ஆஸ்கர் பிரிவில் அவதார் 2, எல்விஸ், டாப் கன் மேவரிக், தி பேட்மேன், ஆல் க்யொட் இன் தி வெஸ்டர்ன் ஃபிரண்ட் உள்ளிட்ட படங்கள் தேர்வாகியுள்ளன. 

மேலும் படிக்க: ஆஸ்கரில் வரலாறு படைத்த 'நாட்டு நாட்டு' பாடல்!

மேலும் படிக்க: வில் ஸ்மித்தின் செயலால் பறிபோகிறது ஆஸ்கார் விருது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News