சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள 'யசோதா' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு

சமந்தா நடிக்கும் ஸ்ரீதேவி மூவிஸின் ‘யசோதா’ திரைப்படம் வருகிற நவம்பர் 11 ஆம் தேதி, 2022 அன்று வெளியாகிறது!

Written by - Vijaya Lakshmi | Last Updated : Oct 17, 2022, 04:55 PM IST
  • சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் யசோதா.
  • உற்சாகமான சமந்தா ரசிகர்கள்
  • ஸ்ரீதேவி மூவிஸின் யசோதா
சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள 'யசோதா' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு title=

பான் இந்திய நடிகையான சமந்தாவின் அடுத்த படமான ‘யசோதா’ தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இந்த வருடம் நவம்பர் 11 அன்று வெளியாகிறது. மதிப்புமிக்க ஸ்ரீதேவி மூவிஸ் புரொடக்‌ஷனின் 14வது படமாக, சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிக்க ஹரி மற்றும் ஹரிஷ் இந்தப் படத்தை இயக்கி உள்ளனர்.

 இந்த நிலையில் இந்த படம் குறித்து தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் பேசுகையில், ’யசோதா’ இப்போதுள்ள காலத்திற்கு ஏற்ற ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் கதையாக இருக்கும். புதிர் மற்றும் உணர்ச்சிமயமான கதையமைப்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கொண்டு பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும் வகையில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | பிக்பாஸ் வீட்டிற்குள் பறந்து சென்ற விஜய் டிவி பிரபலம்; முதல் வைல்டு கார்டு போட்டியாளர்

மொத்தத்தில், இந்தப் படம் குறித்து ஒரு வார்த்தையில் கூற வேண்டும் என்றால் இருக்கை நுனியில் அமரும்படியான கதையமைப்பைக் கொண்டது. இந்தக் கதைக்காகவும் ஆக்‌ஷன் காட்சிகளுக்காகவும் சமந்தா அவரது இரத்தமும் வியர்வையும் கொடுத்து உழைத்திருக்கிறார். பின்னணி இசையில் இதுவரை நீங்கள் கேட்டிராத மணிஷர்மாவின் இசையை கேட்டு மகிழ்வீர்கள். இப்போதைக்கு, இந்தப் படத்தின் தெலுங்கு வெர்ஷன் சென்சார் செய்யப்பட்டுள்ளது. 

மற்ற மொழிகளுக்கான சென்சார் விரைவில் முடிவடைந்து விடும். இந்தப் படத்தின் தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்பு செலவுகளில் எந்தவொரு காரணத்திற்காகவும் நாங்கள் சமரசம் செய்யவில்லை. மிகப்பெரிய பொருட்செலவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பை 100 நாட்களில் முடித்துள்ளோம். இந்தக் காலத்திற்கு ஏற்றவாறு வரக்கூடிய த்ரில்லர் படங்களை விரும்புபவர்களுக்கு இந்த ‘யசோதா’ நிச்சயம் பிடிக்கும். நவம்பர் 11 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது” என்று கூறினார்.

சமந்தாவுடன் வரலக்‌ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி ஷர்மா, சம்பத் ராஜ், ஷத்ரு, மாதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபடா, பிரியங்கா ஷர்மா மற்றும் பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் தொழில்நுட்பக் குழு விவரம்:

இசை: மணிஷர்மா,
வசனம்: புலகம் சின்நாராயனா, Dr. செல்லா பாக்யலக்‌ஷ்மி,
பாடல்: ராமஜோகியா சாஸ்த்ரி,
கிரியேட்டிவ் டைரக்டர்: ஹேமம்பர் ஜஸ்தி,
கேமரா: M. சுகுமார்,
கலை: அஷோக்,
சண்டைப் பயிற்சி: வெங்கட், யானிக் பென்,
எடிட்டர்: மார்தாண்ட். K. வெங்கடேஷ்,
லைன் புரொடியூசர்: வித்யா சிவலெங்கா,
இணை தயாரிப்பாளர்: சிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி,
எக்ஸிக்யூடிவ் புரொடியூசர்: ரவிக்குமார் GP, ராஜா செந்தில்,
இயக்கம்: ஹரி மற்றும் ஹரிஷ்,
தயாரிப்பாளர்: சிவலெங்கா கிருஷ்ண பிரசாத்,
பேனர்: ஸ்ரீதேவி மூவிஸ்

மேலும் படிக்க | முடியாத நயன்தாரா விவகாரம் - அமைச்சர் என்ன சொல்கிறார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News