சீதா ராமன் அப்டேட்: கைதாகும் சூர்யா.. அதிர்ச்சியில் சீதா, ஆட்டத்தை தொடங்கும் மகா!!

Seetha Raman Today's Episode Update: ஆசையாய் புது வீட்டில் பால் காய்ச்சும் சூர்யா மற்றும் மதுவின் சந்தோஷம் நீடிக்குமா? இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன?

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 24, 2023, 10:45 AM IST
  • பால் காய்ச்ச் ஏற்பாடு செய்யும் சூர்யா மது.
  • திட்டமிடும் மகா அண்ட் டீம்.
  • சீதாவை பார்த்து அனைவருக்கும் அதிர்ச்சி.
சீதா ராமன் அப்டேட்: கைதாகும் சூர்யா.. அதிர்ச்சியில் சீதா, ஆட்டத்தை தொடங்கும் மகா!!  title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.

சீதா ராமன் : இன்றைய எபிசோட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். 

பால் காய்ச்ச் ஏற்பாடு செய்யும் சூர்யா மது

இந்த சீரியலில் ராஜசேகர் அடைத்து வைத்திருந்த மதுமிதாவை சூர்யா டிஎஸ்பி உடன் சென்று மீட்டு அழைத்து வந்த நிலையில் இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது. அதாவது, சென்னைக்கு வந்த சூர்யாவும் மதுவும் சந்தோஷமாக வீட்டில் பால் காய்ச்சுவதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கின்றனர். 

மேலும் படிக்க | Vaibhavi Upadhyay: விபத்தில் உயிரிழந்த தீபிகா படுகோன் பட நடிகை..அதிர்ச்சியில் உறைந்த பாலிவுட் திரையுலகம்..!

அதன் பிறகு இருவரும் மகாவிற்கு போன் செய்ய நாங்க சென்னை வந்து சந்தோஷமாக வாழ்க்கையை தொடங்க நீங்க தான் காரணம், வீட்டில் பால் காய்ச்ச நீங்க கண்டிப்பாக வரணும் என அழைக்க மகாவும் கண்டிப்பா வருகிறேன் என சொல்கிறாள். 

திட்டமிடும் மகா அண்ட் டீம்

அதன் பிறகு மகா தன்னுடைய டீமுடன் நாம அங்க போறதுக்கு முன்னாடி நம்முடைய பிளான் எல்லாம் சரியா இருக்கானு செக் பண்ணிடுங்க என சொல்லி போலீஸ் வர வேண்டிய நேரம் என எல்லாவற்றையும் திட்டமிடுகின்றனர். அதனை தொடர்ந்து மகா, சேது, அர்ச்சனா என எல்லாரும் மதுமிதா வீட்டுக்கு கிளம்ப சீதா தானும் வருவதாக சொல்கிறாள். 

மேலும் படிக்க | Indian 2: இந்தியன் 2 இசைக்கு ஜாலியாக ‘வைப்’ செய்யும் அனிருத்-ஷங்கர்..! இணையத்தை கலக்கும் வீடியோ

ஆனால் மகா, ‘அவ உன்னை கூப்பிடவே இல்ல, நீ வரேன்னு சொல்ற..  உனக்கு அசிங்கமாவே இல்லையா’ என சீதாவை அவமானப்படுத்த ராமும் சீதாவை போக வேண்டாம் என்று சொல்லி விடுகிறான். இதனால் சீதா வருத்தமாக இருக்க மீரா உன்கூட நான் வரேன் என சொல்ல இருவரும் மது வீட்டுக்கு கிளம்புகின்றனர். 

சீதாவை பார்த்து அனைவருக்கும் அதிர்ச்சி

அதற்குள் மதுமிதா வீட்டில் மகா டீம் வந்து பால் காய்ச்சி கொண்டிருக்க சீதா வருகையை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அதன் பிறகு மதுமிதா, ‘நீ எதுக்கு இங்க வந்த? அப்பா எதாவது சொல்லி அனுப்பினாரா’ என சண்டை போட, அப்போது போலீஸ் வீட்டிற்கு வந்து வீட்டில் போதை பொருள் இருப்பதாக சோதனை செய்து சூர்யாவை கைது செய்வதாக சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைய மகா மகிழ்ச்சி அடைகிறாள். 

காணத்தவறாதீர்கள்

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

சீதா ராமன்: சீரியலை எங்கு பார்ப்பது?

சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | பக் பக் காட்சிகளுடன் திகில் நிறம்பிய போர் தொழில் டீஸர் வெளியீடு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News