தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். இந்த சீரியலின் கடந்த சனிக்கிழமை எபிசோடில் அஞ்சலி தன்னுடைய பாய் பிரண்டுடன் பேசிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, அஞ்சலி பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வீட்டுக்கு வர மகா அவர்களிடம் பேசிக் கொண்டிருக்க ராம் மற்றும் சீதா ரூமுக்குள் வந்து அஞ்சலிடம் உனக்கு கண்டிப்பா இந்த மாப்பிள்ளை பிடிக்காது என்று சொல்கின்றனர்.
மறுபக்கம் சேது, சத்யா மற்றும் மீரா என எல்லோரும் இந்த கல்யாணத்தில் விருப்பமில்லாமல் மாப்பிள்ளை மனதுக்குள் திட்டியபடி இருக்கின்றனர். இதையடுத்து மகா அஞ்சலியை கூட்டிட்டு வர சொல்ல அஞ்சலியை அழைத்து வருகின்றனர். மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று சொல்லுவார் என்று எதிர்பார்க்க அஞ்சலி தனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் என்று சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறாள். இதைக் கேட்டு மொத்த பேரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
பிறகு சேது உட்பட எல்லோரும் அஞ்சலி பிடித்து எதற்கு கல்யாணத்துல விருப்பம்னு சொன்ன என்று திட்டுகின்றனர். அஞ்சலி என்னை யாரும் மிரட்டல நானாக தன் சொன்னேன் என்று சொல்லிக் கொண்டிருக்க மகா அங்கு வந்து நிற்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதாராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
மேலும் படிக்க | விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நடிகர் விஜய் கட்சி போட்டி? - வந்தது ரகசிய உத்தரவு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ