U/A சான்றிதழ் பெற்றது ரஜினி-யின் 'பேட்ட' திரைப்படம்!

சூப்பர் ஸ்டார் ரஜனி நடிப்பில் உருவாகி வரும் பேட்ட திரைப்படம் U/A சான்றிதழ் பெற்றிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்!

Last Updated : Dec 21, 2018, 07:05 PM IST
U/A சான்றிதழ் பெற்றது ரஜினி-யின் 'பேட்ட' திரைப்படம்! title=

சூப்பர் ஸ்டார் ரஜனி நடிப்பில் உருவாகி வரும் பேட்ட திரைப்படம் U/A சான்றிதழ் பெற்றிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்!

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தல் நடிகர் ரஜினிகாந்த நடித்துவரும் திரைப்படம் "பேட்ட". இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். விஜய் சேதுபதி, சிம்ரன், நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தின் மூலம் முதன்முறையாக ரஜினியின் படத்துக்கு இசையமைத்துருக்கிறார் அனிருத். 

பேட்ட படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்ட பணிகள் முடிந்துள்ள நிலையில் பொங்கலுக்கு திரைக்கு வர தயாராக உள்ளது. முன்னதாக பேட்ட திரைப்படத்தின் பாடல்கள் வெளியான நிலையில் இத்திரைப்படம் தற்போது U/A சான்றிதழ் பெற்றிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இப்படத்தின் இந்தி மற்றும் தெலுங்கு பாடல்கள் இன்று மாலை 5 மணியளவில் வெளியிடப்பட்டது.

Trending News