கோலிவுட்-ன் இன்றைய வெளியீடு: பட்டியல் உள்ளே!

Last Updated : Sep 1, 2017, 01:33 PM IST
கோலிவுட்-ன் இன்றைய வெளியீடு: பட்டியல் உள்ளே! title=

வாரம்தோறும் வெள்ளிகிழமைகளில் தமிழ் திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துவது வழக்கம். அந்த வகையில் இந்த வாரம் வெளியாகும் படங்களின் பட்டியல் ஒரு பார்வை:

1. "புரியாத புதிர்"

கோலிவுட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் புரியாத புதிர். விஜய் சேதுபதி நடித்து நீண்ட நாளாக வெளிவர காத்திருந்த "புரியாத புதிர்" படம் இன்று வெளியாகி உள்ளது.

திரில்லர் பாணியில் இந்த திரைப்படம் உருவாகி உள்ளது. ரெபெல் ஸ்டுடியோ தயாரிப்பில் இப்படத்தினை ரஞ்சித் ஜெயக்கோடி இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி மற்றும் காயத்ரி முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

2. "குரங்கு பொம்மை"

நித்திலன் சுவாமிநாதன் எழுதி இயக்கும் திரைப்படம் "குரங்கு பொம்மை". தமிழ் நாடகம் பாணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் வித்ரத், டெல்னா டேவிஸ் மற்றும் பாரதிராஜா ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடிக்கின்றனர். ஷிரியா ஸ்ரீ மூவிஸ் LLP இப்படத்தை தயாரிக்கிறது.

நீண்ட நாட்களுக்கு பிறகு பாரதிராஜா கோலிவுட் திரும்பியுள்ளதால் மக்களிடையே இப்படம் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.

3. "ஒரு கனவு போல"

இரண்டு பெரும் நடிகர்களின் படத்திற்கு மத்தியில் மூன்றாவதாக இன்று களமிறங்குகிறது "ஒரு கனவு போல" திரைப்படம். 

ரொமாண்டிக் நாடகம் பாணியில் இந்த திரைப்படம் உருவாகி உள்ளது. சி செல்வகுமார் தயாரிப்பில் இப்படத்தினை வி.சி.விஜயசங்கர் இயக்கியுள்ளார். ராமகிரிஷ்ணன் மற்றும் அமலா ரோஸ் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

வெள்ளிதோறும் தமிழ் ரசிகர்களின் கொண்டாட்டத்தை அதிகரிக்க வெளியாகும் தமிழ் திரைப்படங்களின் பட்டியலில் இந்த வாரம் இந்த 3 படங்கள் இடம்பெற்றுள்ளன.

Trending News