வடக்குப்பட்டி ராமசாமி வசூல் விவரம்: 2 நாட்களில் இத்தனை கோடியா!?

Vadakkupatti Ramasamy Box Office Collection: சந்தானம், ஹீரோவாக நடித்துள்ள படம் வடக்குப்பட்டி ராமசாமி. இந்த படம் இரண்டு நாட்களில் பல கோடி வசூல் பெற்றுள்ளது.   

Written by - Yuvashree | Last Updated : Feb 4, 2024, 11:29 AM IST
  • சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள படம், வடக்குப்பட்டி ராமசாமி.
  • இப்படம் 2 நாளில் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது?
  • முழு வசூல் விவரம் இதோ!
வடக்குப்பட்டி ராமசாமி வசூல் விவரம்: 2 நாட்களில் இத்தனை கோடியா!? title=

Santhanam Starrer Vadakkupatti Ramasamy Box Office Collection Worldwide: நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள புதிய படம், வடக்குப்பட்டி ராமாசமி. இப்படம், இரண்டு நாட்களுக்கு முன்பு (பிப்ரவரி 2) வெளியானது. இப்படத்தின் மொத்த வசூல் விவரம் எவ்வளவு தெரியுமா? 

வடக்குப்பட்டி ராமசாமி:

கடந்த சில ஆண்டுகளாக ஹீரோ கதாப்பாத்திரங்களில் நடித்து வரும் சந்தானம், வடக்குப்பட்டி ராமசாமி  (Vadakkupatti Ramasamy) படத்திலும் நாயகனாக நடித்துள்ளார். இதனை கார்த்திக் யோகி இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் சந்தானத்துடன் இணைந்து மேகா ஆகாஷ், நிழல்கள் ரவி, எம்.எஸ்.பஸ்கர், நான் கடவுள் ராஜேந்திரன், ஜான் விஜய், ரவி மரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

கமர்ஷியல் படங்களை தேர்ந்தெடுத்து அதில் ஹீரோவாக நடித்து வரும் சந்தானம், இந்த படத்தையும் அந்த பாணியிலேயே தேர்ந்தெடுத்துள்ளார். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பாசிடிவான விமர்சனங்கள் எழுந்துள்ளது.

மேலும் படிக்க | தலைவர் 171 படத்தில் இளைஞராக நடிக்கும் ரஜினி! வெளியானது சுட சுட அப்டேட்..

இரண்டு நாள் வசூல்..

சந்தானத்தின் சமீபத்திய படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது (Vadakkupatti Ramasamy Box Office Collection). அந்த வகையில், வடக்குப்பட்டி ராமசாமி படமும் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. தமிழ் நாட்டில் மட்டும், இப்படம் முதல் நாளில் சுமார் ரூ.70 முதல் 80 லட்சம் வரை கலெக்ட் செய்துள்ளதாக கூறப்படுகிறது. உலகளவில் சுமார் ரூ.1.30 கோடி ரூபாயை முதல் நாளில் இப்படம் வசூலித்துள்ளது. படம் வெளியாகி இரண்டு நாட்கள் ஆகியுள்ள நிலையில், இப்படம் தற்போது படத்தின் வசூல் விவரம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. 

வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம், இரண்டு நாட்களில் உலகளவில் ரூ.3 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படம், மொத்தம் ரூ.12 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதாகவும், இன்னும் சில வாரங்களில் படம் வசூலை அள்ளலாம் என்றும் கூறப்படுகிறது. 

சந்தானம் வாங்கிய சம்பளம்..

நடிகர் சந்தானம், சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்குள் நுழைந்த நடிகர்களுள் ஒருவர். இவர் பங்குபெற்ற நிகழ்ச்சிகள் பெரிய ஹிட் அடித்ததை தொடர்ந்து இவருக்கு பெரிய திரையில் வாய்ப்பு கிடைத்தது. காமெடி நிகழ்ச்சிகளில் பங்குபெற சில ஆயிரங்களை சம்பளமாக வாங்கி கொண்டிருந்த சந்தானம், பிரபல காமெடியனாக மாறிய பிறகு இதை பன்மடங்காக உயர்த்தி, லட்சங்களில் சம்பளம் வாங்கி வந்தார். இதையடுத்து, 2014ஆம் ஆண்டு ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த பிறகு, இந்த சம்பளம் கோடிகளாக மாறியது. 

சந்தானம், வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் ஹீராேவாக நடிக்க இவர் ரூ.8 கோடி சம்பளமாக வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது (Santhanam Salary for Vadakkupatti Ramasamy). இனி வரும் படங்களில் நடிக்க, தனது சம்பளத்தை உயர்த்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

சந்தானத்திற்கு வெற்றியை தேடித்தந்த படங்கள்..

சந்தானம் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த போது அவரது படங்கள் ஆரம்பத்தில் சரியாக ஓடவில்லை. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக வெளியாகி வரும் அவரது படங்களில் நல்ல காமெடி அம்சங்கள் பொருந்தி உள்ளதால் இப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக, இவர் நடிக்கும் பேய் படங்களுக்கு நல்ல விமர்சனங்கள் கிடைக்கின்றன. இதனால் இனி சந்தானத்தின் மார்கெட்டில் இனி ஏறுமுகம்தான் என்று ரசிகர்கள் கருத்துகளை தெரிவிக்கின்றனர். 

மேலும் படிக்க | சொந்த வீடு, சொகுசு கார், கோடிகளில் சம்பளம்! சூர்யாவின் சொத்து மதிப்பு எவ்வளவு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News