தமிழ் சினிமாவில் விஜய் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கிறார். அவர் நடிக்கும் படங்கள் சர்வசாதாரணமாக 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துவருகின்றன. இதன் காரணமாக விஜய்யின் சம்பளமும் படத்துக்கு படம் உயர்ந்துகொண்டே செல்கிறது.
தற்போது அவர் 100 கோடி ரூபாய் அளவில் சம்பளம் பெறுவதாக தகவல்கள் வெளியாகின்றன. அந்தத் தகவல்கள் உண்மையாக இருக்கும்பட்சத்தில் ரஜினிக்கு அடுத்தபடியாக அதிக சம்பளம் பெறும் நடிகர் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் விஜய் முதல்முதலாக வாங்கிய சம்பளம் குறித்த தகவலை அவரது தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | ஹிப்ஹாப் ஆதி வீட்டின் மீது கல்வீசி தாக்குதல்; இருவர் கைது, நடந்தது என்ன
இதுகுறித்து அவர் அளித்திருக்கும் பேட்டி ஒன்றில், நாளைய தீர்ப்பு படத்துக்கு முன்பு குழந்தை நட்சத்திரமாக ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த விஜய்க்கு 500 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
500 ரூபாய் சம்பளத்தில் ஆரம்பித்த விஜய்யின் திரைப்பயணம் தற்போது 100 கோடி ரூபாயில் வந்து நிற்பது அவரது அர்ப்பணிப்பையும், உழைப்பையும் காட்டுவதாக விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
மேலும் படிக்க | விஜய் கொடுத்த சர்பிரைஸால் குக்வித் கோமாளி சிவாங்கி ஹேப்பி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR