தமிழ் மொழியில் வெளிவந்துள்ள பல படங்களில் சில நடிகர்களை திறமை மிகு பத்திரிகையாளர்களாக காண்பித்திருப்பர். அப்படி வெளிவந்த படங்களில் சில பெரிய ஹிட் அடித்துள்ளன. அப்படி பத்திரிகையாளர்களான நடித்த ஹீரோக்கள் சில பேரை பார்ப்போமா?
முதல்வன்-அர்ஜுன்:
ஆக்ஷன் கிங் என்று அழைக்கப்படும் நடிகர் அர்ஜுன் சமயங்களில் ‘முதல்வன்’ அர்ஜுன் என்றும் அழைக்கப்படுவார். அதற்கு காரணம், இவரது கதாப்பாத்திரம் தமிழ் சினிமாவில் ஏற்படுத்திய தாக்கம்தான். தமிழ் நாட்டின் முதலமைச்சராக வரும் ரகுவரனை நேர்காணல் செய்யும் அவர், ஒரு நாள் முதல்வராகி பின்பு தமிழ் நாட்டின் அரசியல் அமைப்பையே மாற்றுவதுதான் படத்தின் கதை. ஷங்கர் இயக்கியிருந்த இப்படம் 100 நாட்களுக்கும் மேல் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டது.
மேலும் படிக்க | என்ன மணிகண்டன் ஆரம்பிக்கலாமா..லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட குட்நைட் டிரைலர்
கோ-ஜீவா:
முதல்வன் படத்தையடுத்து பத்திரிகை துறைக்கு பெருமை சேர்த்த ஒரு படம், கோ. ஜீவா, கார்த்திகா, பியா என பலர் நடித்திருந்த இப்படத்தினை மறைந்த இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கியிருந்தார். முழுக்க முழுக்க அரசியலையும் பத்திரிகை துறையையும் சுற்றி சுழலும் இப்படம், 2011ஆம் ஆண்டின் வெற்றிப்படங்களில் ஒன்றாக அமைந்தது. அது மட்டுமன்றி வசூலிலும் விமர்சனத்திலும் சக்கை போடு பாேட்டது. இதையடுத்து 2016ஆம் ஆண்டில் கோ-2 என்ற படம் வெளிவந்தது. இதில் பாபி சிம்ஹா, நிக்கி கல்ராணி, ஜான் விஜய் உள்ளிட்டோர் நடித்திருந்தது. ஆனால், கோ படம் அளவிற்கு இந்த படம் பெரிதாக பேசப்படவில்லை.
கவன்-விஜய் சேதுபதி:
விஜய் சேதுபதி முதன் முதலாக பத்திரிகையாளராக நடித்திருந்த படம் கவன். இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து மடோனா சபாஸ்டியன், ஜெகன், டி. ராஜேந்திரன் மற்றும் பலர் நடித்திருந்தனர். அரசியல்வாதிகளின் பிடியில் இருக்கும் ஒரு தொலைக்காட்சி செய்தி நிறுறவனம் மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறது, எந்தெந்த அநீதிகளையெல்லாம் ஒரு பாவமும் அறியாதோருக்கு இழைக்கிறது என்பதை இப்படத்தில் நன்றாக காட்டியிருப்பர். விஜய் சேதுபதி துணிச்சலான பத்திரிகையாளர் கேரக்டருக்கு நன்கு பொருந்தி போயிருப்பார். இப்படம், விமர்சன ரீதியாக பெரிய அளவில் பேசப்படவில்லை என்றாலும் வசூலில் வாரிக்குவித்தது.
மாறன்-தனுஷ்:
தனுஷ், மாளவிகா மோகனன் ஜோடியாக நடித்த படம் மாறன். அரசியல்வாதியிடம் பகைத்துக்கொள்ளும் ஒரு பத்திரிகையாளர் என்னென்ன சவால்களை தனது வாழ்க்கையில் எதிர்கொள்கிறார் என்பதையும் அதை எதிர்த்து எப்படி போராடுகிறார் என்பதையும் காட்டியிருந்த படம்தான் மாறன். ஜீவி-தனுஷ் என்ற வெற்றிக்கூட்டணி கைகோர்த்தும், இப்படம் விமர்சன ரீதியாக பயங்கர அடிவாங்கியது. பல பேர் இந்த படத்தை பார்ப்பதற்கு கூட மெனக்கெடவில்லை. அந்தளவிற்கு படம் மோசமாக இருந்ததாக ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது.
யூ டர்ன், நடிகையர் திலகம்-சமந்தா:
கோலிவுட், டோலிவுட்டிலிருந்து மெல்ல மெல்ல பாலிவுட்டிற்கு சென்ற சமந்தா நடித்திருந்த படம் மகாநதி. பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இப்படத்தில் நடிகை சமந்தா ஒரு பத்திரிகையாளராக நடித்திருந்தார். கீர்த்திதான் இப்படத்தின் மெயின் கதாப்பாத்திரம் என்றாலும், சமந்தாதான் கீர்த்தியின் கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் கிடைப்பதற்கு மையப்புள்ளியாக இருந்தார். இந்த படத்திற்கு முன்னதாக யூ டர்ன் என்ற அமானுஷ்ய படத்திலும் பத்திரிகையாளராக நடித்திருந்தார் சமந்தா. பத்திரிகையாளராக நடித்தது மட்டுமன்றி அதற்கு ஏற்றார் போல முடியை பாதியாக வெட்டிக்கொண்டும் வளைய மூக்குத்தி போட்டுக்கொண்டும் அந்த கதாப்பாத்திரத்திற்கு பொருந்தி போனார். நடிகையர் திலகம்-யூ டர்ன் ஆகிய இரண்டு படங்களும் 2018ஆம் ஆண்டில் வெளிவந்து ரசிகர்ளிடையே நல்ல வரவேற்ப்பினை பெற்றது.
மேலும் படிக்க | பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தள வீடியோவை இன்ஸ்டாவில் பகிர்ந்த குந்தவை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ