இனி யூ-ட்யூப் விமர்சனத்திற்கு திரையரங்கில் தடை...!

யூ-ட்யூப்பில் திரைப்பட விமர்சனம் எடுப்பவர்களாக நீங்கள், உங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Feb 8, 2023, 10:03 PM IST
  • யூ-ட்யூப் விமர்சகர்கள் மீது பல குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.
  • தமிழ் மட்டுமின்றி பல்வேறு திரைத்துறையிலும் இதே நிலைதான்.
  • யூ-ட்யூப் விமர்சனங்களுக்கு கட்டுப்பாடு விதிப்பு.
இனி யூ-ட்யூப் விமர்சனத்திற்கு திரையரங்கில் தடை...! title=

திரைப்பட விமர்சனத்தில், யூ-ட்யூப் விமர்சனம் தற்போது அதிகரித்துள்ளது. ஒவ்வொரு ரசனை உள்ள ரசிகர்களுக்கும் தங்களுக்கான ஆஸ்தான யூ-ட்யூப் விமர்சகர்களை வைத்துள்ளனர். இதனால், யூ-ட்யூப் விமர்சனம் என்பது பெரிய வியாபாரமாக உயர்ந்துவிட்டதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. 

அந்த வகையில், கோலிவுட் மட்டுமின்றி பல்வேது சினிமா வட்டாரங்களிலும் யூ-ட்யூப் விமர்சனங்கள் மீது பல்வேது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. அதனை கட்டுப்படுத்தவும், சினிமா வியாபாரத்தை பாதிக்காத வகையிலும் விதிமுறைகள் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையும் பல நாள்களாக எழுந்துள்ளன.

தமிழ்நாட்டிலும், படங்கள் வெளியாகி மூன்று நாள்களுக்கு பின்னரே யூ-ட்யூப் விமர்சனங்களை அனுமதிக்க வேண்டும் என தமிழ்த் திரைப்டத் தயாரிப்பாளர் சங்கம் கடந்த செப்டம்பர் மாதம் நடத்திய பொதுக்குழுவில் தீர்மானமாக கொண்டுவந்தது. மேலும், திரையரங்கினுள் யூ-ட்யூப் விமர்சனங்களை படம் எடுக்க தடை விதிக்க வேண்டும் என்ற தீர்மானத்தையும் நிறைவேற்றியிருந்தது. அந்த அளவிற்கு,யூ-ட்யூப் விமர்சகர்களின் அத்துமீறல் இருப்பதாக கூறப்பட்டது.

மேலும் படிக்க | லியோ விஜய்க்கு போட்டியாக தனது அணியை களமிறக்கும் அஜித்...

இந்நிலையில்,கேரளாவில் நாளை (பிப். 9) முதல் திரையரங்குகளில் யூ-ட்யூப் விமர்சனங்களை எடுக்க தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, திரையரங்க வளாகத்தில் திரைப்பட விமர்சனம் எடுக்க யூ-ட்யூப் விமர்சகர்களுக்கு பிப்.9ஆம் தேதி முதல் தடை விதிக்கப்படுவதாக kerala exhibitors association என்ற கேரள திரையரங்கங்கள் சங்கத்தின் தலைவர் விஜய்குமார் தெரிவித்துள்ளதாக சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டுள்ளது.

மேலும், வரும் ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து, திரையரங்கில் படம் வெளியாகி 42 நாள்களுக்கு பின்தான் ஓடிடி வெளியீடு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இந்த அறிவிப்பை அடுத்து அண்டை மாநிலங்களான கோலிவுட், டோலிவுட், சாண்டல்வுட் வட்டாரமும் இதுபோன்று அறிவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | 'தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம் ஒரு குப்பை' அதுக்கு எப்படி ஆஸ்கர் விருது எதிர்பார்க்கலாம்? பிரகாஷ் ராஜ்
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News