மாநிலங்களவை கூடியதும் அதிமுக, தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவை காலையில் தொடங்கியதும் பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட வங்கி முறைகேடுகள் குறித்து பிரதமர் பதிலளிக்கவேண்டும் என வலியுறுத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியது. பஞ்சாப் வங்கி மோசடி பிரச்சனையால் மாநிலங்களவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதை தொடர்ந்து அவை ஒத்திவைக்கப்பட்டது.
2018-19ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட், நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. பின்னர், பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு நிறைவுற்று, 2-ஆவது அமர்வு கடந்த 5-ஆம் தேதி தொடங்கியது.
ஆனால், பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி, ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரிக்கை, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரம் உள்பட பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்ந்து முடங்கியுள்ளன.
இந்நிலையில், இன்று மாநிலங்களவை காவிரி மேலாண்மை வாரியம், ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி அதிமுக, தெலுங்கு தேசம் கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுப்பட்டனர்.
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.
Rajya Sabha adjourned till tomorrow after protests by TDP and AIADMK MPs #budgetsession pic.twitter.com/luHszPUnn4
— ANI (@ANI) March 19, 2018