Cholesterol Control Tips: கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும் உணவுகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
Cholesterol Control Tips: கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதால் உடலில் பல வித பிரச்சனைகள் ஏற்படுகின்றன. கெட்ட கொழுப்பின் அளவு அதிகமானால், அதனால் பக்கவாதம், மார்டைப்பு, இதய கோளாறுகள் போன்ற பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகையால், கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைப்பது மிக அவசியமாகும். கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் சில காய்கறிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
எல்டிஎல் எனப்படும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை எப்பொழுதும் கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் அவசியம். சில எளிய இயற்கையான வழிகளின் மூலம் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்கலாம். கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் சில காய்கறிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
காய்கறிகளில் ப்ரோக்கோலி அதிக அளவில் ஆரோக்கிய நன்மைகள் கொண்ட காயாக கருதப்படுகின்றது. கொலஸ்ட்ரால் நோயாளிகள் தினமும் தங்கள் டயட்டில் ப்ரோக்கோலியை உட்கொள்ளலாம். இது உடல் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் உதவும்.
முள்ளங்கியில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இது செரிமான அமைப்பை சீராக்குவதுடன் கெட்ட கொலஸ்ட்ராலை நீக்குவதிலும் பெரிய அளவில் உதவுகின்றது. இதில் உள்ள ஆண்டி-ஆக்சிடெண்டுகள், வைட்டமின் சி ஆகியவை ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகின்றன.
கேரட்டில் பல வித ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. இதில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கெட்ட கொல்ஸ்ட்ரால் அதிகமாக உள்ளவர்கள் தினமும் கேரட் சாப்பிடலாம். இது கொழுப்பை நீக்குவதுடன் உடலில் உள்ள நச்சுகளையும் நீக்குகின்றது.
பச்சை மிளகாயில் பெப்பரின் என்ற கூறு உள்ளது. இது கெட்ட கொலஸ்ட்ராலை உடலை விட்டு வெளியேற்றுவதில் உதவியாக உள்ளது. எனினும், இதை அதிக அளவில் உட்கொள்ளாமல் சரியான அளவில் சாப்பிட வேண்டும். பச்சை மிளகாய் எடை இழப்பிலும் உதவும்.
நமது சமையலில் வெங்காயம் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றது. வெங்காயத்தில் கொலஸ்ட்ரால் எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ளன. வெங்காய சாறு உடலில் உள்ள கெட்ட கொழுப்பை விரட்டி அடிக்கும் வல்லமை கொண்டது. சாலட், சாறு வடிவிலோ அல்லது பிற உணவு வகைகளில் சேர்த்தோ வெங்காயத்தை உட்கொள்வது நன்மை பயக்கும்.
பூண்டு உணவின் சுவையை அதிகரிப்பதோடு உடலுக்கும் பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கின்றது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றது. தினமும் மூன்று அல்லது நான்கு பூண்டு பற்களை உட்கொள்வதன் மூலம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கலாம்.
கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக உள்ளவர்கள் தங்கள் டயட்டில் எலுமிச்சையை அடிக்கடி சேர்க்கலாம். இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் பிற ஆரோக்க்கிய நன்மைகள் கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகின்றன. தினமும் காலையில் எலுமிச்சை சாறு குடிப்பதன் மூலம் கொலஸ்ட்ரால் குறைவதுடன் உடல் எடையும் குறையும்.
இந்த உணவுகளுடன் ஆரோக்கியமான வாழ்க்கை முறை, உணவுமுறை ஆகியவை அவசியம். உடல் செயல்பாடுகள், போதுமான தூக்கம், தண்ணீர், உடற்பயிற்சி ஆகியவையும் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்க உதவும்.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.