Diabetes Symptoms: இன்றைய பரபரப்பான வாழ்க்கையிலும், பிஸியான வாழ்க்கை முறையிலும் நீரிழிவு நோய் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. நீரிழிவு நோய் என்பது வாழ்நாள் முழுவதும் நீடித்து வரும் நோய் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இது வகை 1 மற்றும் வகை 2 என இரண்டு வகைகளைக் கொண்டுள்ளது. இந்த நோயை சரியாகக் கையாளவில்லை என்றால், அது வேறு பல உடல் உபாதைகளை உண்டாக்கும். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த, அதன் அறிகுறிகளை அறிந்து கொள்வது அவசியம்.
நீரிழிவு நோயாளிகள் மீண்டும் மீண்டும் பசி எடுப்பது போன்ற உணர்வை பெறுகிறார்கள். ஒருவருக்கு அடிக்கடி பசி எடுத்தால், தாமதிக்காமல், அவர் உடனடியாக உடல்நலப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.
ஒருவரது தொண்டை மீண்டும் மீண்டும் மிகவும் வறண்டு போனால், தண்ணீர் குடித்தாலும், தாகம் தணியாமல் இருந்தால், அவர் கண்டிப்பாக தனது உடல் சர்க்கரை அளவை பரிசோதிக்க வேண்டும். தணியாத தாகம் நீரிழிவு நோய்க்கான ஒரு மிகப்பெரிய அறிகுறியாகும்.
இரவு நேரங்களில், நான்கு அல்லது ஐந்து முறை சிறுநீர் கழிக்க எழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், உடல் சர்க்கரை அளவை பரிசோதித்துக்கொள்ள வேண்டும், ஏனெனில் இது நீரிழிவு நோயின் பெரிய அறிகுறியாகும்.
ஒருவருக்கு திடீரென உடல் எடை வேகமாகக் குறைய ஆரம்பித்தால், அது நீரிழிவு நோயின் அறிகுறியாக இருக்கலாம். ஆகையால், அடிக்கடி உடலில் ஏற்படும் எடை மாற்றங்களை கவனம் கொண்டு, திடீர் எடை இழப்பு இருந்தால், எச்சரிக்கையாக உடல் சர்க்கரை அளவை சரிபார்ப்பது நல்லது.
10 முதல் 12 மணி நேரம் வரை களைப்படையாமல் உழைத்த ஒருவர், 8 மணி நேரம் வேலையிலேயே சோர்வடையத் தொடங்கினால், சர்க்கரை நோய் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதுவும் நீரிழிவு நோயின் ஒரு அறிகுறியாக இருக்கலாம்.