Weight Loss Tips: ஆரோக்கியமாக வாழ, நம் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது மிக அவசியம். சில பழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம், உடல் பருமனை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், பல நோய்களையும் தவிர்க்கலாம்.
Weight Loss Tips:உடல் பருமன் உங்களை பாடாய் படுத்துகிறதா? தொப்பை கொழுப்பு கரையாமல் அடம் பிடிக்கிறதா? உங்களுக்கான தீர்வை இங்கே காணலாம். உணவு உட்கொள்ளும்போதும் சில குறிப்புகளை நினைவில் கொண்டால் பிடிவாதமான தொப்பை கொழுப்பையும் விரட்டி விடலாம். உடல் பருமனை குறைக்க உதவும் அந்த டயட் டிப்ஸ் பற்றி இங்கே காணலாம்.
நமது தினசரி உணவில் சில விஷயங்களை கடைபிடித்து, சில விஷயங்களை தவிர்த்தாலே நாம் நமது உடல் எடையை எளிதாக கட்டுப்படுத்த முடியும். எடை இழப்பில் உதவும் சில எளிய உணவுமுறைகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கார்போஹைட்ரேட் உட்கொள்ளலை குறைத்து, புரதச்சத்து, நார்ச்சத்து ஆகியவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும். பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை டயட்டில் அதிகம் சேர்க்க வேண்டும்.
காலை உணவில் புரதத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். இது கலோரிகளை அதிகரிக்காமல் நாள் முழுவதும் நம் உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கும். இதன் மூலம் வயிற்றுக்கு நிரம்பிய உணர்வு கிடைப்பதோடு, அடிக்கடி பசி ஏற்படாமலும் இருக்கும். இதனால் தேவையற்ற உணவுகளை உட்கொள்வது தவிர்க்கப்படுகின்றது.
காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு என அனைத்து வேளைகளிலும் சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும். உணவில் புரதச்சத்து, மினரல்கள், வைட்டமின்கள், நார்ச்சத்து, இரும்புச்சத்து ஆகியவை இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். இதன் மூலம் கெட்ட கொழுப்பு சேர்வதைத் தவிர்த்து தொப்பை கொழுப்பையும் குறைக்கலாம்.
காலையில் எழுந்தவுடன் வெந்நீர் குடிப்பது செரிமானத்தை சீராக்கி, தொப்பை கொழுப்பை (Belly fat) குறைக்க உதவும். வெறும் வெந்நீருக்கு பதிலாக, கிரீன் டீ, இலவங்கப்பட்டை தண்ணீர், சீரக நீர், ஓம நீர், சோம்பு தண்ணீர் போன்ற மூலிகை நீர் வகைகளையும் உட்கொள்ளலாம். இவை உடல் கொழுப்பைக் கரைக்க பெரிதும் உதவும்.
உணவில் அதிக நார்ச்சத்தை சேர்த்துக்கொவது மிக அவசியம். நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது சர்க்கரையை உறிஞ்சுவதை மெதுவாக்குகிறது. இதன் காரணமாக, சாப்பிட்ட பிறகு உங்கள் இரத்த சர்க்கரை அளவு திடீரென அதிகரிக்காது. மேலும், வயிற்றிலும் நிரம்பிய உணர்வு இருக்கும்.
வேகமாக உடல் எடையை குறைக்க சர்க்கரையை குறைப்பதோ அல்லது முற்றிலும் சாப்பிடாமல் இருப்பதோ நல்லது. இதன் மூலம் எடை இழப்பில் உதவி கிடைப்பதோடு இரத்த சர்க்கரை அளவும் கட்டுக்குள் இருக்கும்.
காலையில் 40 நிமிடங்கள் நடக்கவும், அல்லது 12 முறை சூரிய நமஸ்காரம் செய்யவும். இவை விரைவாக உடல் எடையை குறைக்க உதவும். இவற்றின் மூலம் உடலில் உள்ள கலோரிகள் வேகமாக எரிக்கப்படுகின்றன.
இந்த பழக்கங்களுடன் நாள் முழுதும் சமச்சீரான உணவு, போதுமான உடல் செயல்பாடுகள், ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆகியவையும் உடல் எடையை குறைக்க மிக அவசியமானவை. இவை அனைத்தையும் சேர்த்து ஆரோக்கியமான வழியில் உடல் எடையை குறைத்தால், உடலுக்கு எந்த வித தீங்கும் ஏற்படாமல் இருக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.