இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் (MS.Dhoni) அதிகாரபூர்வ டுவிட்டர் கணக்கில் இருந்து வெரிஃபைட் செய்யப்பட்டதற்கான ப்ளூ டிக் தற்போது நீக்கப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள், அரசு அதிகாரிகள், விளையாட்டு துறையை சேர்ந்தவர்கள், மக்கள் மத்தியில் புகழ் பெற்றவர்கள் என பிரபலமானவர்களின் பெயர்களில் சமூகவலைதளங்களில் போலியான கணக்குகள் நிறைய உலாவரும்.
இவற்றில் எது உண்மையான கணக்கு அல்லது பொய்யான கணக்கு என்பதை தெரிந்து கொள்ள அந்தந்த சமூக வலைதள நிறுவனங்கள் ப்ளூடிக் என்று கூறப்படும் வெரிஃபைட் பேட்ஜை பெயருக்கு அருகில் கொடுப்பார்கள். இதனை வைத்து இது உண்மையான ஐடி என்று நாம் அறிந்துகொள்ள முடியும்.
தற்போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் சிஎஸ்கே அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனியின் (MS.Dhoni) அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்டில் இருந்து வெரிஃபைட் செய்யப்பட்டதற்கான ப்ளூடிக் நீக்கப்பட்டுள்ளது.
ALSO READ | தோனியின் புதிய ஹெர் ஸ்டைல் இணையத்தில் வைரல்
பொதுவாக பெயர்களை மாற்றினால் இவ்வாறு ப்ளூடிக் எடுக்கப்படுவது வழக்கம். ஆனால் தோனியின் கணக்கில் பெயர் மாற்றப்படவில்லை. ட்விட்டரின் புதிய கொள்கைகளின் படி சமீபமாக ஆக்டிவில் இல்லாத கணக்குகளை நீக்கி வருகிறது. அவ்வகையில் தோனியின் ப்ளூடிக் நீக்கப்பட்டு இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ALSO READ | ட்விட்டர் கணக்கு ஹேக்கிங் தொடர்பாக குஷ்பு தமிழக டிஜிபியிடம் புகார்
சமீபத்தில் நடிகை குஷ்புவின் டிவிட்டர் கணக்கில் ப்ளூடிக் அடிக்கடி நீக்கப்பட்டு பின் வழங்கப்பட்டது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையும், அரசியலிலும் பிரபலமாகவும் இருக்கும் குஷ்பு சுந்தரின் (Kushboo Sundar) ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ALSO READ | Viral Video: 160 அடி உயரத்தில் டிக்டாக் வீடியோ எடுத்த பெண் கீழே விழுந்து மரணம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR