காகங்கள் இரை தேடுவதிலும், தேவையான இடத்தில் இருக்கும் உணவுகளை எடுப்பதிலும் சாமர்த்திய பறவைகள். கோழி மற்றும் பூனைகளுடன் இவை விளையாடுவதை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்புகள் உண்டு. நாய்க்கு மட்டும் காகங்களை பிடிக்காது. கத்திக்கொண்டு அவற்றின் காதருகில் சென்றால், கோபத்தின் உச்சத்துக்கே செல்லும் நாய்கள், துரத்தி துரத்தி கடிக்க ஓடும்.
மேலும் படிக்க | வினோத வழக்கு! குரங்கின் மீது போட்ட FIR எங்கே; வனத்துறையினரின் நிபந்தனை!
ஆனால், காகங்கள் உடனடியாக உயர பறந்து அருகே இருக்கும் மரத்தின் மீது அல்லது மின் கம்பங்களின் மீது அமர்ந்து கொள்ளும். காகத்தின் ஒரே குறிக்கோள், நாய், பூனை உள்ளிட்டவை ஏதேனும் சாப்பிட்டுக் கொண்டிருந்தால், அவற்றை ஏமாற்றி அந்த உணவை எடுத்துச் செல்ல வேண்டும். அப்போது காகங்கள் செய்யும் தகிடு தத்தங்களை நேரில் பார்த்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.
What a Trick. pic.twitter.com/CWgBcVdwlW
— Amazing Nature (@AmazingNature00) February 1, 2022
இதுவரை காகங்களின் இத்தகைய விளையாட்டை நீங்கள் பார்த்திருக்கவில்லை என்றால், இப்போது வைரலாகியிருக்கும் வீடியோ மூலம் பார்த்துக் கொள்ளுங்கள். கார் பார்க்கிங் ஒன்றில் இருக்கும் பூனை தன்னுடைய உணவை தின்று கொண்டிருக்கிறது. அப்போது, அங்கு வரும் இரு காகங்கள் அந்த உணவை எடுக்க முயலுகின்றன. பூனை அனுமதிக்காததால், இரு காகங்களும் யுக்தி ஒன்றை கையில் எடுத்து உணவை திருடுகின்றன. அதாவது, ஒரு காக்கை பூனையை கொத்துகிறது. கடுப்பாகும் பூனை, அந்த காகத்தை நோக்கி ஓட, மற்றொரு காகம் அந்த உணவை எடுத்துச் செல்கிறது. இணையத்தில் பரவியிக்கும் இந்த வீடியோவை ஆயிரக்கணகானோர் பார்த்து ரசித்துள்ளனர். ஏராளமானோர் மற்றவர்களுக்கு பகிர்ந்துள்ளனர்.
மேலும் படிக்க | வைரல் வீடியோ: முதலையை புரட்டி எடுக்கும் சிறுத்தை.. திக் திக் நிமிடங்கள்..!!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR