இது என்னடா காட்டு யானைக்கு வந்த சோதனை: வைரலாகும் வீடியோ

மசனக்குடியில் யானை ஊருக்குள் வந்து குப்பைத் தொட்டியில் உணவு தேடுகிறது

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 11, 2022, 12:12 PM IST
  • காட்டு யானையின் வைரல் வீடியோ
  • மசனகுடி பகுதிகளில் அடிக்கடி காட்டு யானைகளின் நடமாட்டம்
  • குடி நீர் மற்றும் உணவை தேடும் காட்டு யானை
இது என்னடா காட்டு யானைக்கு வந்த சோதனை: வைரலாகும் வீடியோ title=

அன்றாடம் பல விலங்குகளின் அட்டகாசங்கள் இணையத்தில் களைகட்டி வருகிறது, விலங்குகளின் வீடியோக்கள் தான் வெகு விரைவில் கவன ஈர்ப்பை பெற்று விடுகிறது. அதிலும் யானைகள் வீடியோவுக்கு இணையத்தில் எப்போதும் வரவேற்பு இருக்கும். உணவுக்காக அலைவது முதல் குட்டிகளை பத்திரமாக அழைத்துச் செல்வது வரை யானைகளின் வீடியோ காண்போரை ரசிக்க வைக்கும். அதன்படி இங்கு ஒரு யானையின் வீடியோ வைரலாகி வருகின்றது. இந்த சம்பவம் மசனகுடி பகுதியில் அறங்கேரியுள்ளது. 

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்த முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உள்பட்ட மசினகுடி பகுதியில் காட்டு யானைகள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக யானைகளுக்கு வனப்பகுதியில் சரியான தீவனம் கிடைக்காததால் குடியிருப்பு பகுதியை நோக்கி வருகின்றன. 

மேலும் படிக்க | என்னய்யா நடக்குது இங்க: விருந்தில் தாத்தா செஞ்ச வேலையால் ஷாக் ஆன நெட்டிசன்கள் 

இந்த நிலையில் மசனகுடி பகுதிகளில் அடிக்கடி காட்டு யானைகளின் நடமாட்டம் காணப்படுகிறது குடி நீர் மற்றும் உணவை தேடி காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் உலா வருகிறது. அதன்படி மசினகுடி ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு உள்ள குப்பைத் தொட்டியில் காட்டு யானை ஒன்று அதில் கிடந்த உணவு கழிவுகளை உட்கொண்டது. அந்த குப்பைத் தொட்டியில் உணவைத் தேடி அதிலிருந்த பொருட்களை உண்ணும் காட்டு யானையின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

பிளாஸ்டிக் கழிவுகள் யானையில் உடலுக்குள் செல்ல வாய்ப்பு உள்ளது. இதனால் யானை உடல்நலம் பாதிக்கப்படலாம் என்று வன உயிரின ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதற்கிடையே இந்த யானை கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் தொடர்ந்து வருவதால் அந்த பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே காட்டு யானை ஊருக்குள் வருவதை தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க | போரை நிறுத்துங்கள் மழலையின் கெஞ்சல்! 

அதேசமயம் காட்டு யானை ஒன்று குப்பைத்தொட்டியில் உணவைத் தேடும் இந்த காட்சி வனவிலங்கு ஆர்வலர்கள் இடையே வேதனையை அளித்துள்ளது.

மேலும் படிக்க | Viral Video: முதலையிடம் சிக்கிய வரிக்குதிரைக் கூட்டம்; மன பதற வைக்கும் காட்சி 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News