இந்தியா உள்பட பல நாடுகளில் PUBG விளையாட்டை தடை செய்ய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றது. காரணம் இந்த விளையாட்டில் மூழ்கும் நபர்கள் மற்ற வேலைகளை மறந்து மன நோய் உண்டாகும் அளவிற்கு பாதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் தற்போது திருமண கோளத்தில் இருக்கும் மணமகன் ஒருவர் PUBG விளையாட்டில் மூழ்கி, திருமணத்தில் ஆர்வம் காட்டாமல் இருப்பது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.
திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் இடம்பெற்றிருக்கும் மணமகன் PUBG விளையாட்டினை விளையாட, அவரது மனைவி கணவனின் விளையாட்டை கண்டு ரசிக்கின்றார். இதற்கிடையில் திருமண பரிசு அளிக்க வரும் நபரையும் மணமக்கள் ஒதுக்கி தள்ளுகின்றனர். இணையத்தில் வைரலாக பரவி வரும் இந்த வீடியோ உண்மையான வீடியோவா அல்லது காட்சிக்கா படம் பிடிக்கப்பட்டதா என்ற அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை,...
இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் தற்போது ஸ்மார்ட் போன் யுகத்தில் பயணித்து வருகிறது. உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகமான பப்ஜி (PUBG -playerUnknown's Battlegrounds, popularly) விளையாட்டு இளைஞர்கள் குழந்தைகள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த வரவேற்பு தற்போது பெரும்பாலான இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் PUBG விளையாட்டுக்கு அடிமையாகியுள்ளனர் என்று கூறுவது பொருத்தமாக இருக்கும். ஓய்வில்லாமல் PUBG விளையாடிய மாணவர் மனநல பாதிப்பு. PUBG-ல் முழு நேரத்தையும் செலவிடும் மாணவர்கள் என தினமும் ஒரு செய்தி வெளிவந்து நம்மை அதிர்ச்சிக்கு ஆளாக்கி வருகின்றது.
இந்நிலையில், இந்தியாவின் பல மாநிலங்களில் PUBG விளையாட்டை தடை செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் தமிழகத்தில் PUBG விளையாட்டை தடை செய்ய வேண்டும் என வழக்கு நடைப்பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.