தமிழக அரசு உடையாளூரில் நினைவாலயமும் சென்னையில் ராஜராஜ சோழனுக்கு பிரமாண்டமான நினைவு மண்டபமும் அமைத்திட வேண்டும் என தமிழக பாஜக தேசிய செயலர் H ராஜா வலியுறுத்தியுள்ளார்!
இதுதொடர்பாக இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது., "இன்று உடையாளூரில் மாமன்னர் ராஜராஜ சோழனின் சமாதியில் அஞ்சலி. தமிழக அரசு உடையாளூரில் நினைவாலயமும் சென்னையில் ராஜராஜ சோழனுக்கு பிரம்மாண்டமான நினைவு மண்டபமும் அமைத்திட வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.
முன்னதாக செய்தியாளர்களிடன் பேசிய அவர்., உடையாளூரில் ராஜராஜ சோழனுக்கு நினைவாலையம் அமைத்திட வேண்டும். ஏனெனில் பெரியவர்களுடைய சமாதியில் சிவன் கோவில் கட்டும் பழக்கம் இந்து மதத்தில் உண்டு.
இன்று உடையாளூரில் மாமன்னர் ராஜராஜ சோழனின் சமாதியில் அஞ்சலி. தமிழக அரசு உடையாளூரில் நினைவாலயமும் சென்னையில் ராஜராஜ சோழனுக்கு பிரம்மாண்டமான நினைவு மண்டபமும் அமைத்திட வேண்டும் pic.twitter.com/CvzwzHDv0k
— H Raja (@HRajaBJP) June 28, 2019
ராஜராஜ சோழனுக்கு அரசாங்கம் நினைவாலையம் ஏழுப்ப முன்வராத பட்சத்தில், பொதுமக்களை அழைத்து பேசி நாமே நினைவாலதை கட்டலாம் என தெரிவித்துள்ளார்.
முன்னதாக ராஜராஜசோழனின் காலம் இருண்டகாலம் என்று பேசிய திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு எதிராக தமிழகம் எங்கும் எதிர்ப்பலைகள் எழுந்தன. குறிப்பாக பாஜக தலைவர்கள் ரஞ்சித்து எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தஞ்சை திருப்பனந்தாள் காவல் நிலைய ஆய்வாளர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு செய்திருந்தார்.
அதுநாள் முதல் ராஜராஜ சோழன் பெயர் தமிழகத்தில் மீண்டும் பிரபலமாக தொடங்கியுள்ளது. இந்நிலையில் தற்போது சென்னையில் ராஜராஜ சோழனுக்கு பிரமாண்டமான நினைவு மண்டபம் அமைத்திட வேண்டும் என பாஜக தேசிய செயலர் H ராஜா வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.