ViralVideo: வேட்டைக்கு வந்த சிங்கத்தை சங்கறுத்த காட்டெருமை..! என்ன நடந்தது? என நீங்களே பாருங்க

காட்டு ராஜா என்ற திமிருடன் வேட்டையாட வந்த சிங்கத்தை, எகிறியடுத்து ஓட விட்ட காட்டெருமையின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 10, 2023, 08:28 PM IST
ViralVideo: வேட்டைக்கு வந்த சிங்கத்தை சங்கறுத்த காட்டெருமை..! என்ன நடந்தது? என நீங்களே பாருங்க title=

சிங்கம் காட்டு ராஜா... வேட்டையாடுவதில் ராஜதந்தரி என சொல்ல கேட்டிருப்போம். ஆனால், எல்லா நேரமும் ராஜதந்தரிக்கான நேரமாகவே இருக்காது. சில நேரங்களில் ராஜதந்திரியும் தன்னுடைய வியூகம் தோற்றுப்போகும்போது அடிவாங்க நேரிடும். அப்படி தான் கம்பீரமாக வேட்டையாட சென்ற காட்டு ராஜா சிங்கம், காட்டெருமையிடம் மூர்க்கத்தனமாக உதை வாங்கிக் கொண்டு வந்திருக்கிறது. வலியவனாக கருதிக் கொண்டு தவறான நேரத்தில் வேட்டையாட சென்ற, எளியவனும் எட்டி உதைக்க தயங்க மாட்டான் என்பதற்கு உதாரணம் தான் இந்த சிங்கத்தின் வீடியோ. 

மேலும் படிக்க | Viral Video: சாலையை நோக்கி படையெடுத்த பாம்புகள்! அசாலடாக அள்ளி வீசும் நபர்!

இடம் பொருள் தெரியாமல் வேட்டையாட சென்று காட்டெருமையில் செமையாக உதை வாங்கிக் கொண்டிருக்கிறது சிங்கம். இந்த வீடியோ இப்போது வைரலாகியுள்ளது. வடிவேலு பாணியில் சொல்வதென்றால், போர் தந்திரம் ஜஸ்ட் மிஸ்ஸானதால், சிங்கத்திற்கு பாடி பஞ்சராகிவிட்டது. அந்த வீடியோவை பார்த்தால் உங்களுக்கே புரியும். இரண்டு காட்டெருமைகள் நீர் நிலைகளுக்கு அருகே நின்று மேய்ச்சல் எடுத்துக் கொண்டிருக்கின்றன. அப்போது கொடும் பசியில் வரும் சிங்கம் ஒன்று, உணவை தவறவிட்டுவிடக்கூடாது என்பதற்காக வேட்டையாட பயங்கர வேகத்தில் வருகிறது. 

சிங்கம் தாக்க வருவதை பார்த்தவுடன், காட்டெருமைகளும் பயந்துவிட்டன. அவை தப்பித்து ஓடுவதற்கான வழியையும் தேடத் தொடங்கிவிட்டன. அந்த நொடிப்பொழுதிற்குள் ஒரு காட்டெருமையின் குரல்வளையை சிங்கம் பிடித்து வேட்டையாட முற்படுகிறது. அப்போது, அருகில் பயந்து ஓட தயாராக இருந்த மற்றொரு காட்டெருமை நொடியில் சிங்கத்திடம் சிக்கிய காட்டெருமையை மீட்க போர் வீரனாக மாறி, சிங்கத்தை எகிறி அடிக்கிறது. 

அந்த ஒரு அடியில் சிங்கம் நிலைகுலைந்து போகிறது. வேட்டைக்கு சிக்கிய காட்டெருமையும், சிங்கத்தை அடித்த காட்டெருமையும் அடி வாங்கிய சிங்கம் தெளிவதற்குள் அந்த இடத்தை காலி செய்துவிட்டு புயல்வேகத்தில் கிளம்பிவிட்டன. சிங்கம் அடி வாங்கி விழும் வீடியோ வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

மேலும் படிக்க | அநாசமாய் சாலையைக் கடக்கும் அனகோண்டா பாம்பு! போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்த பாம்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News