டீ எப்படி போடுவது? தெருவோர டீக்கடையில் கற்றுக் கொண்ட பில் கேட்ஸ்! வைரல் வீடியோ...

How To Make Chai Bill Gates Experience : மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ், பிரதமர் நரேந்திர மோடியுடன் பல்வேறு விஷயங்களை விவாதித்த பிறகு ‘டீ’ போடுவதை ரசித்த வீடியோ வைரலாகிறது 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 1, 2024, 06:41 AM IST
  • சாய்வாலாவுடன் பில் கேட்ஸ் சந்திப்பு!
  • தேநீரை ரசித்துக் குடித்த பிரபல தொழிலதிபர்
  • டீக்கடைக்காரர்கள் ரொம்ப புத்திசாலிங்க! பில் கேட்ஸ் கருத்து
டீ எப்படி போடுவது? தெருவோர டீக்கடையில் கற்றுக் கொண்ட பில் கேட்ஸ்! வைரல் வீடியோ... title=

Bill Gates In India : இந்தியாவுக்கு வருகை தந்துள்ள மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ், பிரதமர் நரேந்திர மோடியை நேற்று (2024 பிப்.29 வியாழக்கிழமை) சந்தித்துப் பேசினார். செயற்கை நுண்ணறிவு (AI), பெண்கள் தலைமையிலான மேம்பாடு மற்றும் விவசாயம் மற்றும் ஆரோக்கியத்தில் புதுமை பற்றி இருவரும் பேசியதாக தெரிகிறது. இந்தியா வருகை மற்றும் பிரதமருடனான சந்திப்பு பற்றி மகிழ்ச்சியடைந்ததாக பில் கேட்ஸ் கூறுகிறார்.

சமூக ஊடக தளம் X இல் தனது அனுபவத்தைப் பகிர்ந்துக் கொண்ட பில் கேட்ஸ், "பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பது எப்போதும் ஊக்கமளிக்கிறது. அவருடன் பேசினால் நேரம் போவதே தெரியவில்லை. பேசிக் கொண்டே இருக்க வேண்டும் என்றும், விவாதிக்க நிறைய இருப்பதாகவும் தோன்றுகிறது" என்றும் எழுதினார்.

பொது நலனில் செயற்கை நுண்ணறிவு நுட்பம் பற்றி பேசியதாக தனது பதிவில் குறிப்பிட்டுள்ள பில் கேஎட்ஸ், DPI; பெண்கள் தலைமையிலான வளர்ச்சி; விவசாயம், சுகாதாரம் மற்றும் காலநிலை மாற்றத்தில் புதுமை என்று பல விஷயங்களைப் பற்றி பேசினோம். முக்கியமாக இந்தியாவின் செழுமையான கலாசாரத்தில் இருந்து உலகம் எவ்வாறு கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை விவாதித்தோம்" என்று பில் கேட்ஸ் தனது எக்ஸ் ஊடகப் பதிவில் விளக்கமாக பதிவிட்டுள்ளார்.  

மேலும் படிக்க | விவசாயிகள் போராட்டம்: வன்முறையில் ஈடுபட்டால் விசா, பாஸ்போர்ட் ரத்து... ஹரியானா அரசு அதிரடி

பில் கேட்ஸின் பதிவிற்கு பதிலளித்த பிரதமர் மோடி, "உண்மையில் இதுவொரு அற்புதமான சந்திப்பு! நாம் வாழும் பூமியை மேம்படுத்துவது, உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் துறைகளைப் பற்றி விவாதிப்பது  மகிழ்ச்சி அளிக்கிறது" என்று எழுதினார்.

 

தொழிலதிபர் பில் கேட்ஸ் பிரதமரை சந்தித்தது எந்த அளவுக்கு பேசப்பட்டதோ அதே அளவுக்குக்கு அவர் நாக்பூரில் உள்ள பிரபல தேநீர் கடையில் டீ குடித்ததும் பிரபலமாகிவிட்டது. தெருவோர டீக்கடைக்கார சுனில் பாட்டீலுடன், கேட்ஸ் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். 'டோலி சாய்வாலா' என்று அழைக்கப்படும் பிரபலமான டீக்கரையை நடத்தி வரும் இந்த இளைஞருடன் பில் கேட்ஸ் இருக்கும் வீடியோ வைரலாகிறது. 

மேலும் படிக்க | புண்ணிய நதியையே கழிவுநீராக்கிய நீர்மாசு! கங்கையில் குளிக்கத் தடை விதித்த பசுமை தீர்ப்பாயம்!

இந்தியாவின் புதுமை கலாச்சாரத்தையும் பாராட்டிய பில் கேட்ஸ் 

"இந்தியாவில் ஒரு கோப்பை தேநீர் தயாரிப்பதில் கூட புதுமைகளைக் காணலாம்" என்று கேட்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்தார்.  

பில் கேட்ஸ்க்கே டீ கொடுத்த டீக்கரைக்காரர் என இந்த தேநீர் விற்பவர் பிரபலமாகிவிட்டார். அவருடைய அனுபவத்தை செய்தியாளர்கள் கேட்டபோது, வீடியோவில் உள்ள மனிதர் (கேட்ஸ்) யார் என்று உண்மையிலுமே தனக்குத் தெரியாது என்றும், "வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவருக்கு" தான் தேநீர் தயாரித்ததாகவும் கூறினார்.

ஹைதாராபாதில் கேட்ஸ் டீ குடிப்பதற்காக சுனில் பாட்டீல் நாக்பூரில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அப்போது, வெளிநாட்டுக்காரர் ஒருவருக்கு டீ போட அழைத்துச் செல்வதாக தெரியும் என்று அவர் கூறியது ஆச்சரியமானதாக இருந்தது. 

"அடுத்த நாள் நான் நாக்பூருக்கு (ஹைதராபாத்தில் இருந்து) திரும்பியபோதுதான் நான் யாருக்கு டீ பரிமாறினேன் என்பதை உணர்ந்தேன்" என்று அவர் கூறினார். தனக்குத் தெரியாமலேயே உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்ட இந்திய தேநீர் கடைக்காரர்களில் சுனில் பாட்டீலும் ஒருவராகிவிட்டார்.

மேலும் படிக்க | விசிட் அடித்த பிரதமர்... ரெடியான தென்னிந்திய வேட்பாளர் லிஸ்ட் - இன்று வெளியீடு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News