வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன.
இணையத்தில் இப்போது ஒரு வீடியோ வைரலாக பரவிவருகிறது. அதில் சிறுவன் ஒருவன் தன்னுடைய தாயின் உயிரை சரியான நேரத்தில் காப்பாற்றியுள்ளான். இந்த வீடியோ பலரால் பாராட்டப்பட்டுள்ளது. அதில் ஒரு பெண் ஒரு ஏணியில் ஏறி இருப்பதை நாம் காணலாம். அப்போது திடீரென்று அந்த ஏணி கிழே விழிந்துவிடுகிறது.
இதன் பின் அந்த பெண் அங்கிருந்த கம்பியை பிடித்துக்கொண்டு தனியாக காற்றில் தொங்கி கொண்டிருக்கிறார். இந்த காட்சியை கிழே இருந்து பார்த்துக்கொண்டிருந்த சிறுவன் வேகமாக ஓட்டிச்செல்கிறார். மேலும் தன்னுடைய தாயை காப்பாற்ற ஏணியை மீண்டும் எடுத்து முடிந்த அளவு முயற்சி செய்து மீண்டும் மேலே போடுகிறான். இதனால் சுதாரித்துக்கொண்ட தாய் அதை பிடித்து கிழே இறங்கிவிடுகிறார்.
கண் கலங்க வைக்கும் வீடியோவை இங்கே காணலாம்:
माँ गैराज का दरवाज़ा रिपेयर कर रहीं थी कि तभी उनकी सीढ़ी गिर गयी. माँ ऊपर लटके देख नन्हे जांबाज़ ने पूरी जान लगाकर सीढ़ी को वापस लगाकर उनक़ी मदद क़ी...
इस छोटे बच्चे क़ी सूझ-बूझ और हिम्मत क़ी जितनी प्रशांसा क़ी जाए कम है. pic.twitter.com/GjX6Ol3pid
— Dipanshu Kabra (@ipskabra) December 23, 2022
இந்த வீடியோ 32,000-க்கும் மேற்பட்ட வியூஸ்களையும், 13 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளையும் பெற்றுள்ளது. இந்த சிறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். மேலும் இந்த வீடியோவை ஐபிஎஸ் அதிகாரி திபன்சு கப்ரா தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | சொர்க்கம் பூமியில் வநதுவிட்டதோ? அழகால் அதிசய வைக்கும் நதியின் அதிசய வீடியோ வைரல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ