‘Any tips sir’: தல தோனி டிவிட்டரில் கொடுத்த கிண்டல் பதில் வைரலாகி வருகிறது

தல தோனி டிவிட்டரில் கொடுத்த கிண்டல் பதில் மிகவும் வைரலாகி வருகிறது. தோனியின் நகைச்சுவை உணர்வு மீண்டும் வெளிப்பட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : May 31, 2021, 08:22 PM IST
‘Any tips sir’: தல தோனி டிவிட்டரில் கொடுத்த கிண்டல் பதில் வைரலாகி வருகிறது title=

இந்தியாவின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியின் நகைச்சுவை உணர்வு மீண்டு வெளிப்பட்டுள்ளது. அதுவும் ஒரு வரியில் கிண்டலாக பதில் சொல்வதில் வல்லவர் என்பதும் நிரூபணமாகியுள்ளது. 

ஐ.பி.எல்  (IPL) போட்டிகளாக இருந்தாலும் சரி, அல்லது இந்திய கிரிக்கெட் அணியாக இருந்தாலும், ஆட்ட நேரத்தில் போது, விக்கெட் கீப்பிங்கில் இருக்கும் தோனியின் நகைச்சுவையான கிண்டல், கமெண்ட்கள் ஸ்டம்ப் மைக்கின் மூலம் கேட்கும் போது, அதனை அவரது ரசிகர்கள் தொடர்ந்து ரசித்து வந்துள்ளது.

இதற்கிடையில், தோனியின் (MS.Dhoni) ஒரு பழைய ட்வீட் ஒரு ரசிகருக்கு கிண்டலாக பதிலளிக்கும் அத ட்வீட் இணையத்தில் மீண்டும் வெளிவந்து, மிகவும் வைரலாகி வருகிறது.

2012 ஆம் ஆண்டில், தோனி தனது பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்கில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக சமூக ஊடகங்களில் நேரத்தை செலவழிக்கிறார் என ட்ரோல் செய்ய முயன்ற ஒருவருக்கு, சூப்பாராக, கிண்டலாக  ஒரு பொருத்தமான பதிலடியை கொடுத்தார்.

ஜூலை 2012 இல், இந்தியா அணி, இலங்கைக்கு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட பயணம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தபோது, ​​முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் தல தோனிக்கு, அறிவுரை கூறும் விதமாக, ஒரு ட்விட்டர் பயனர் தோனியை தனது பேட்டிங்கில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தினார். அதற்கு எம் எஸ் தோனி , தக்க பதிலடி கொடுத்தது, அதுவும் கிண்டலாக பதில் ட்வீட் செய்தது அனைவரையும் கவர்ந்துள்ளது
"Any tips sir" என்று தோனி அதற்கான பதில் ட்வீட்டில் எழுதியிருந்தார்.

 

மிகவும் வைரலாகும் அந்த ட்வீட்,  2,500 க்கும் மேற்பட்ட பயனர்களால் ரீ ட்வீட் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 2007 ICC T 20 உலகக் கோப்பை, ஐ.சி.சி 2011 உலகக் கோப்பை, மற்றும் சாம்பியன்ஸ் டிராபி 2013 உள்ளிட்ட அனைத்து ஐ.சி.சி (ICC) கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டனாக இருக்கும் தோனி, 2020 ஆகஸ்டில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இருப்பினும், அவர் தொடர்ந்து இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK ) அணிக்காக விளையாடுகிறார்.

ALSO READ | MS Dhoni-தான் என் வெற்றிக்கு காரணம்: புகழ்ந்து தள்ளும் தீபக் சாஹர்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

 

Trending News