Ganesh Chaturthi 2024 Vinayagar Dissolve Viral Video : கணேஷ் சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி என, இந்த பண்டிகைக்கு பல்வேறு பெயர்கள் உண்டு. எந்த விஷயங்களை தொடங்குவதற்கு முன்னரும் பலர் வணங்கும் கடவுளாக இருக்கிறார், விநாயகர். இவ்வளவு ஏன்? பலர் தங்களின் நோட்டு புத்தகங்களிலும், பரீட்சை ஆரம்பிக்கும் முன்பாகவும், கணக்கு எழுதுவதற்கு முன்பாகவும், திருமணத்திற்கு பத்திரிகை எழுதுவதற்கு முன்பாகவும் பிள்ளையார் சுழி போட்டுதான் அனைத்தையும் ஆரம்பிப்பர். எங்காவது சுற்றுலா செல்வதற்கு முன்பு கூட, விநாயகர் கோவிலுக்கு முன்பாக நிறுத்தி ஒரு தேங்காயை உடைத்துவிட்டு செல்வர். இப்படி அனைத்திற்கும் முழு முதற்கடவுளாக பார்க்கப்படும் விநாயகருக்காக கொண்டாடப்படும் பண்டிகைதான், விநாயகர் சதுர்த்தி.
மேலும் படிக்க | முட்டையை அபேஸ் செய்த சிறுமியை... போட்டுத் தாக்கிய தாய் மயில்... வைரல் வீடியோ
விநாயகர் சதுர்த்தி 2024:
இந்த வருடத்திற்கான விநாயகர் சதுர்த்தி, கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்பட்டது. இந்திய அளவில் பெரும்பாலான இந்துக்களால் கொண்டாடப்பட்ட இந்த பண்டிகை பல வண்ண விநாயகர்களாலும், கோலங்களாலும், விதவிதமான பலகாரங்களாலும் அலங்கரிக்கப்பட்டு கொண்டாடப்பட்டது.
பொதுவாக விநாயகர் சதுர்த்தி என்றால், அனைவரது இல்லங்களிலும், களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகரை வாங்கி வந்து வைத்து அதற்கென்று குட்டியாக ஒரு குடை, விநாயகருக்கு பிடித்த பழங்கள், கொழுக்கட்டை உள்ளிட்டவற்றை செய்து படைப்பர். இந்த விநாயகர் சிலையை, 3 அல்லது 5 தினங்கள் கழித்து கடலில் கரைப்பது அனைவருக்கும் வழக்கம். இது இல்லங்களில் மட்டுமல்ல, தெருவுக்கு தெரு ஆளுயர விநாயகரை வாங்கி வைத்தும் அதை ஊர்வலமாக எடுத்துச்சென்று கடலில் கரைப்பர்.
வைரல் வீடியோ:
ஒரு ஊரில், விநாயகரை கைகளால் ஆற்றில் போட்டு கரைப்பதற்கு பதிலாக, அதற்கென்று தனியாக ஒரு ரேம்ப் மிஷினை வைத்து, அதில் வரிசையாக பிள்ளையார்களை அடுக்கி மெதுவாக சென்று, தொப்பென்று தண்ணீரில் விழும் வகையில் விநாயகரை கரைத்திருக்கின்றனர்.
இதை பார்த்த நெட்டிசன்கள், “ஏன் அத கைல போட்டு கரைக்க மாட்டீங்களா?” என்று கேள்வியெழுப்பி இருக்கின்றனர்.
விநாயகரை கடலில் கரைப்பது ஏன்?
விநாயகர் சதுர்த்தியின் போது, கணபதி தனது பக்தர்களின் இல்லங்களிலும், தன்னை வணங்குபவர்களின் இல்லங்களிலும் 3 அல்லது 5 நாட்கள் தங்குவதாக நம்பப்படுகிறது. அதன் பிறகு, அவரை அவரது இல்லத்திற்கு திரும்ப அனுப்பும் வகையில், கடலில் விநாயகர் சிலையை கரைப்பதாக கூறப்படுகிறது. மொத்தத்தில், கடல்தான் விநாயகரின் இல்லம் எனவும் அவரை வீட்டிற்கு அனுப்பி, ஓய்வு எடுக்க வைக்கும் வகையில் இந்த சடங்கு செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க | படிக்கட்டில் ஏறிய நபரிடம் வம்பிழுத்த குரங்கு, அப்புறம் என்னாச்சி: வீடியோ வைரல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ