அட எங்கப்பா பந்த காணோம்... திணறிய தென்னாபிரிக்கா வீரர்கள்!

விசாகப்பட்டினத்தில் நடைப்பெற்று வரும் இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான முதல் டெஸ்ட்டியில் பெரும்பாலும் இந்திய கிரிக்கெட் அணி பேட்ஸ்மேன்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டன. 

Last Updated : Oct 4, 2019, 10:48 AM IST
அட எங்கப்பா பந்த காணோம்... திணறிய தென்னாபிரிக்கா வீரர்கள்! title=

விசாகப்பட்டினத்தில் நடைப்பெற்று வரும் இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான முதல் டெஸ்ட்டியில் பெரும்பாலும் இந்திய கிரிக்கெட் அணி பேட்ஸ்மேன்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டன. 

தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா மற்றும் மாயங்க் அகர்வால் ஆகியோர் 317 ரன்கள் கூட்டணியைச் சேர்த்தனர். விராட் கோலி மற்றும் அஜிங்க்யா ரஹானே ஆகியோர் தங்கள் பங்கிற்கு அகர்வாலுடன் துணை நின்றனர்.

அகர்வாலை வெளியேற்றிய பின்னர், இந்தியா 2-ஆம் நாளில் விரைவில் 500-ஐத் தாண்டி, தென்னாப்பிரிக்கர்களை அன்றைய இறுதிப் பகுதியில் ஒரு தந்திரமான பிழைக்குக் கொண்டுவந்தது. வழக்கமாக ஆக்ரோச ஆட்டத்தை வெளிப்படுத்தும் ரவீந்திர ஜடேஜா, இந்த போட்டியில் ஒரு நங்கூரப் பாத்திரத்தில் விளையாடினார். 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

What a moment 

A post shared by cricket.heaven.2 (@cricket.heaven.2) on

ஜடேஜா தனது இன்னிங்ஸில் 46 பந்துகளை நீட்டி 30 ரன்கள் எடுத்தார். நிதானமான இவரது ஆட்டம் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய அதே வேலையில், ஆட்டத்தின் இடையில் ஜடேஜா அடித்த பந்து எதிரணி வீரர்களையும் சிரிப்பு அலையில் மூழ்கடிக்கச்செய்தது.

கேசவ் மகாராஜ் அவருக்கு வீசிய ஒரு பந்து நான்கு பவுன்டரியை எட்ட, பந்து எல்லைக் கயிறுகளின் விளம்பரத் திணிப்புக்கு இடையில் சிக்கிக்கெண்டது. பந்தின் பின்னால் சென்ற வீர்களாலும் பந்து இருக்கும் இடத்தை கண்டறியமுடியவில்லை. பந்தை தேட ஒரு பட்டாளம் ஆடுகளத்தில் நுழைந்து தேடியபோதிலும் பந்து யார் கண்ணிலும் சிக்கவில்லை, கேமிராவின் கண்களை தவிர.

சிறிது நேரம் கழித்து ஐடன் மார்க்ராம் பந்தைக் கண்டுபிடித்து அதை மீண்டும் விளையாட்டிற்கு கொண்டு வந்தார். அத்தருணம் பந்து இருந்த இடத்தை கண்டு வியப்பில் ஆழ்ந்த அணைவரும் ஒரு கணம் தங்களை மறந்து சிரிப்பு அலையில் மூக்கினர்.

Trending News