Viral News: தென் கொரொயாவில் தீயணப்பு படையின் கவுரவ தூதராக நியமிக்கப்பட்ட ’நாய்’..!!

தென்கொரியாவின் ஹொன்சோங் கவுண்டியில் (Honseoung county) வசிக்கும் நான்கு வயதான பேக்கு (Baekgu) என்ற நாய், தனது முதலாளியான 90 வயதான கிம் என்ற  பெண்மணியின் உயிரை காப்பாற்றியுள்ளது

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 9, 2021, 04:30 PM IST
Viral News: தென் கொரொயாவில் தீயணப்பு படையின் கவுரவ தூதராக நியமிக்கப்பட்ட ’நாய்’..!! title=

நாய் என்றாலே நன்றியுள்ள பிராணி தான் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை. அதனை நிரூபித்த தென் கொரொயாவின் இந்த நாய்க்கு பாராட்டுக்கள் குவிந்துள்ளதோடு, தென் கொரியாவில், தனது முதலாளியின் உயிரை காப்பாற்றிய நாய்க்கு அந்நாட்டு அரசு கவுரவ பதவியை அளித்து பெருமைபடுத்தியுள்ளது

தென்கொரியாவின் (South Korea) ஹொன்சோங் கவுண்டியில் (Honseoung county) வசிக்கும் நான்கு வயதான பேக்கு (Baekgu) என்ற நாய், தனது முதலாளியான 90 வயதான கிம் என்ற  பெண்மணியின் உயிரை காப்பாற்றியுள்ளது. அதன் முதலாளிக்கு மறதி நோய் உள்ளது குறிப்பிடத்தக்கது

குறிப்பிட்ட அந்த நாயின் முதலாளியான் கிம் என்ற அந்த வயதான பெண்மணி, ஆகஸ்ட் 25 அன்று காணாமல் போனார், அதன் பிறகு போலீசார் அந்த பெண்ணை தேடும் நடவடிக்கையில் இறங்கினர்.

பாதுகாப்பு கேமராவின் காட்சிகளை போலீசார் ஆராய்ந்து பார்த்த போது, ​​கிம். தனது வீட்டிலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு நெல் வயலில்  இருப்பதைக் கண்டனர்.

ALSO READ | Snake Poison as Covid Drug: பாம்பின் நஞ்சு, கோவிட் தொற்றுநோய்க்கு சிறந்த மருந்தாகலாம்!

நெல் வயலில் அவர் மயங்கி விழுந்ததால், அவ்வழியாக சென்றவர்களால் அவர் அங்கே விழுந்து கிடப்பதை பார்க்க முடியவில்லை. ஆனால் அந்த வயதான பெண்மணியின் விசுவாசமான நாய் பேக்கு அவளை கண்டுபிடித்து, நாய்கள்  மனிதனின் சிறந்த நண்பன் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்தது.

பேக்குவை பாராட்டிய போலீஸார்,  கிம் என்ற அந்த பெண்மணியை அவரது நாய் காப்பாற்ற வரவில்லை என்றால் அந்த வயலில் கிம் இறந்திருப்பார் என்று தெரிவித்தனர்.

ALSO READ | Neanderthals: மனிதர்களுடன் உடலுறவு கொண்டதால் நியண்டர்டால்கள் அருகியிருக்கலாம்: ஆய்வு

கிம்மால் எழுந்திருக்க முடியாத நிலையில், வானிலையும்  மோசமாக இருந்த காரணத்தினால், தனது முதலாளியை விட்டு விலகாமல், அவர் அருகிலேயே இருந்தது. அந்த விசுவாசமான நாய் குளிரால் நடுங்கிய அந்த பெண்மணியின் உடலுக்கு கதகதப்பை உண்டாக்க அருகிலேயே இருந்தது
ஹோன்சோங் கவுண்டியின் கவர்னர் யாங் சியுங்-ஜோ இது குறித்து கூறுலையில், "கோவிட் -19 காரணமாக ஒரு சவாலான இந்த நேரத்தில், பேக்கு நம்பமுடியாத அதிசயத்தை நிகழ்த்தி அனைவரின் மனதையும் கவர்ந்து விட்டது" என்றார்.

பேக்கு நாயின் இந்த விசுவாசத்தை பாராட்டி, அந்த நாய்க்கு விருது வழங்கியதோடு,  தேசிய தீயணப்பு படையின், கவுரவ வீரர், தீயணைப்பு படை தூதர் என அந்த நாய் நியமனம் செய்யப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News