US Election 2020: ஜோ பிடனுக்கு வாழ்த்து சொல்லாமல் சீனா மவுனம் காப்பது ஏன்..!!!

டொனால்ட் டிரம்ப் இன்னும் தனது தோல்வியை ஏற்கவும் இல்லை என்பதோடு, தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, சட்டமன்றத்தை அவர் அணுகும் மனநிலையில் உள்ளார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 9, 2020, 07:52 PM IST
  • டொனால்ட் டிரம்ப் இன்னும் தனது தோல்வியை ஏற்கவும் இல்லை என்பதோடு, தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, சட்டமன்றத்தை அவர் அணுகும் மனநிலையில் உள்ளார்.
  • வாக்குகள் குப்பைகளில் கிடந்த வீடியோக்கள் வைரலானதும் குறிப்பிடத்தக்கது.
  • அமெரிக்காவின் 46 வது அதிபராகப் போகும் ஜோ பிடனை அனைத்து உலக தலைவர்களும் வாழ்த்தியுள்ளனர்.
US Election 2020: ஜோ பிடனுக்கு வாழ்த்து சொல்லாமல் சீனா மவுனம் காப்பது ஏன்..!!! title=

அமெரிக்காவின் 46 வது அதிபராகப் போகும் ஜோ பிடனை அனைத்து உலக தலைவர்களும் வாழ்த்தியுள்ளனர். அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பிடனை வாழ்த்தாமல் சீனா இன்னும் மவுனம் காத்து வருகிறது.

டொனால்ட் டிரம்ப் (Donald Trump) இன்னும் தனது தோல்வியை ஏற்கவும் இல்லை என்பதோடு, தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, சட்டமன்றத்தை அவர் அணுகும் மனநிலையில் உள்ளார். வாக்குகள் குப்பைகளில் கிடந்த வீடியோக்கள் வைரலானதும் குறிப்பிடத்தக்கது. 

ALSO READ | சந்தி சிரிக்கும் அமெரிக்க தேர்தல்.... இந்தியாவின் உதவி நாட அமெரிக்க நிருபர் அறிவுரை..!!!

இதற்கிடையில், பல உலகளாவிய தலைவர்கள் பிடனை வாழ்த்தியுள்ளனர். அதிபர் வேட்பாளராக போட்டியிட்ட ஜோ பிடென் மற்றும் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் (Kamala harris) ஆகியோர் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் அமெரிக்காவின் அனைத்து நகரங்களிலிருந்தும் வாழ்த்துக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டங்கள் காணப்படுகின்றன.

கடந்த நான்கு ஆண்டுகளில் டொனால்ட் டிரம்ப் பதவிக்காலத்தில், வெள்ளை மாளிகையில் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே மோதல் போக்கு நிலவியது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் போர் தொடர்ந்தது. அதே நேரத்தில், கொரோனா தொற்றுநோய் பரவத் தொடங்கியதில் இருந்து, அமெரிக்கா சீனாவை எதிர்த்து மேலும் வலுவான குரல் கொடுத்தது. பெய்ஜிங்கின் மனித உரிமை அமைப்பு இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என அமெரிக்கா கூறியது.

ALSO READ | Joe Biden கடந்து வந்த பாதை.. சேஸ்ல்மேன் மகன் டு அமெரிக்க அதிபர்..!!!

சீனா (China), தவிர ரஷ்யா, மெக்ஸிகோ உள்ளிட்ட சில முக்கிய நாடுகளும் ஜோ பிடனை (Joe Biden) வாழ்த்தவில்லை. திங்களன்று, சீன வெளியுறவு அமைச்சகம், அமெரிக்க அதிபர் தேர்தலில் இன்னும் வெற்றி உறுதி செய்யப்படவில்லை என கூறியுள்ளது. வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் பத்திரிகையாளர் சந்திப்பின் போது, ​​அமெரிக்க சட்டங்கள் மற்றும் நடைமுறைகளின்படி தேர்தலின் முடிவு  இன்னும் தீர்மானிக்கப்படவில்லை சீனா கூறினார். 

அமெரிக்கா குறித்த விஷயத்தில் சீனா தெளிவாக உள்ளது, இரு நாடுகளுக்கு இடையிலான வேற்றுமையை நீக்கி, நல்லுறவை ஏற்படுத்தவே விரும்புகிறோம் என வெளியுறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார்.

ALSO READ | Donald Trump: அரசியல் தோல்வியை தொடர்ந்து குடும்ப வாழ்க்கையிலும் தோல்வியா..!!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News