"பெண் ஓட்டுநர்களுக்கு பெரும்பாலும் வாகனத்தை ஓட்ட மட்டும் தான் தெரியும்!", என்ற கூற்று அமெரிக்காவில் நிருபனம் ஆகியுள்ளது!
ஆம்,... கடந்த சனிகிழமை அன்று அமெரிக்காவின் வீதியில் அமைந்துள்ள பெட்ரோல் மற்றும் கேஸ் நிரப்பும் நிலையத்தில், பெண் ஒருவர் தனது காருக்கு எப்படி பெட்ரோல் நிரப்புவது என தெரியாமல் திகைத்துள்ளார். தனது காருக்கு எரிபொருள் நிரப்ப வேண்டி அவர் பரிதவித்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Tesla Model S வாகனத்தை கொண்டு வந்த பெண்மனி, தனது கார் மின்சாரத்தால் இயங்கும் கார் என அறியாமல், தனது காருக்கு பெட்ரோல் நிருப்ப முயற்சித்துள்ளார். மின்சாரம் செலுத்த வேண்டிய மின்சார இணைப்பில் பெட்ரோல் பம்பின் முனையினை நுழைத்துள்ளார்.
இந்த சம்பவத்தினை, அப்பெண்மனியின் காருக்கு பின்னால் பெட்ரோல் நிரப்ப காத்திர்ந்த நண்பர்கள் படம் பிடித்துள்ளனர். இந்த வீடியோவினை அவர்கள் இணைத்திலும் பதிவேற்றியுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஒருகட்டத்தில் பொருமையினை இழந்த நண்பர்கள், குறிப்பிட்ட பெண்மணியிடம் சென்று அவரது கார் மின்சாரத்தால் இயங்கும் கார் என தெளிவுபடுத்தியுள்ளனர். பின்னர் தனது அறியாமையினை புரிந்துக்கொண்டு கேமிராவை விட்டு தப்பிச்சென்றார் அந்த அப்பாவி பெண்..