உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் நகரில் இருந்து ஒரு விசித்திரமான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இங்கு ஒருவர் பாட்டிலில் பாம்புடன் மருத்துவமனையை அடைந்தார். இதை பார்த்து மருத்துவமனையில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மருத்துவர்களும் பீதி அடைந்தனர்.
பாம்பை பார்த்ததும் அந்த இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதே சமயம் மருத்துவமனையில் இருந்த மருத்துவர் அந்த நபரிடம் பாம்பு பற்றி கேட்டபோது அந்த நபரின் பதிலை கேட்டு அனைவரும் திகைத்தனர்.
உண்மையில், உன்னாவ் மாவட்டத்தின் மகி காவல் நிலையப் பகுதியில் உள்ள ராவ் பகுதியில், வெள்ளிக்கிழமை அதிகாலை ஒரு பெண்ணை பாம்பு கடித்துள்ளது. வலியை உணர்ந்த பெண், பாம்பை பார்த்து கத்த ஆரம்பித்தார். சத்தம் கேட்டு அந்த பெண்ணின் கணவர் மற்றும் குடும்பத்தினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
இதையடுத்து அங்கு பாம்பை பார்த்த கணவர் உடனே பயப்படாமல் அதை பிடித்து பாட்டிலில் வைத்து அடைத்து விட்டார். இதனையடுத்து அந்த நபர் மனைவியுடன் பாம்பையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
மேலும் படிக்க | கொஞ்சிக் கொஞ்சி பேசி மதிமயக்கும் கிளி; வியப்பில் ஆழ்ந்த நெட்டிசன்கள்
இங்கு, கணவர் ராமேந்திரா மருத்துவமனையில் இது குறித்து கூறுகையில், ‘இது போன்ற பாம்பு கடித்த சம்பவம், முன்னதாக, எங்கள் கிராமத்தில் இரண்டு முறை ஏற்பட்டுள்ளது. அப்போது, பாம்பு கடித்த அந்த நபருக்கு உதவ எனது கிராம மக்களுடன் மருத்துவமனைக்கு வந்துள்ளேன். அப்போது எந்த பாம்பு கடித்தது என்று மருத்துவர் கேட்டு அதன் பிறகு தான் ஊசி போடுவதை பார்த்திருக்கிறேன்' என்றார்.
அத்தகைய சூழ்நிலையில், பெரும்பாலானோருக்கு எந்த பாம்பு என்று கேட்கும் போது பதில் தெரியாமல் தவிக்கின்றனர். இதனால், பலர் உயிரையும் இழக்கின்றனர். என் மனைவியை கடிக்கும் பாம்பை நானும் கொண்டு வந்ததற்கு இதுவே காரணம். என் மனைவி உயிர் பிழைப்பாள் என்று நம்புகிறேன்’ என்றார்.
ராமேந்திரா மேலும் கூறுகையில், 'எங்கள் வீட்டின் சில பகுதி அடர்த்தியான புதர் உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், பல முறை பாம்புகள் வீட்டிற்குள் வருகின்றன. ஆனால், இது வரை எங்கள் வீட்டில் பாம்பு கடித்த சம்பவம் நடந்ததில்லை என்றார்.
இருப்பினும், ராமேந்திரனின் புரிதல் மற்றும் துணிச்சலால், அவரது மனைவியின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, மருத்துவமனை மருத்துவர்கள், தெரிவிக்கையில், பாம்பு கடித்த பெண்ணிற்கு மருந்துகள் வழங்கப்பட்டதாக தெரிவித்தனர். அந்த பெண் தற்போது அபாய கட்டத்தை தாண்டிவிட்டார். இதனுடன் பாம்பும் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | Viral Video: சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளை இங்கே ‘iPhone’ ட்யூனை இசைக்கிறது..!!
மேலும் படிக்க | சேவல் மீது ஜாலியாக ரைட் செய்யும் பூனைக்குட்டி! வைரலாகும் வீடியோ!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR