தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்க.. ஒரே அடியில் குட்டியை அடக்கிய தாய் பூனை!

பூனைக்குட்டி ஒன்று அதன் தாய் பூனையின் சொல் பேச்சு கேக்காமல் அங்குமிங்குமாக ஓடி திரிந்து கொண்டிருப்பதை கண்டு கடுப்பான தாய் பூனை ஒரே அடியில் அதனை அமரவைக்கிறது.  

Written by - RK Spark | Last Updated : Sep 12, 2022, 07:48 AM IST
  • தாயிடம் சேட்டை செய்யும் பூனை.
  • ஒரு இடத்தில் உட்காராமல் சேட்டை செய்கிறது.
  • இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ.
தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்க.. ஒரே அடியில் குட்டியை அடக்கிய தாய் பூனை! title=

இணையத்தில் பகிரப்படும் விலங்குகளின் வீடியோக்களில் குறிப்பாக பூனைக்குட்டிகளின் வீடியோக்கள் பெரும்பாலான இணையவாசிகளை கவர்ந்து விடுகிறது.  அதற்கு காரணம் பூனைக்குட்டிகள் பார்ப்பதற்கு க்யூட்டாகவும், அவை செய்யும் செயல்களும் க்யூட்டாக இருப்பது தான், பலரது வீடுகளிலும் பூனைக்குட்டிகளை செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகின்றனர்.  அவை செய்யும் சில குறும்புத்தனங்கள், வேடிக்கையான விஷயங்களை படம்பிடித்து இணையத்தில் மக்களின் பார்வைக்காக பதிவேற்றப்படுகிறது, அத்தகைய காட்சிகளை நாம் பார்க்கும்பொழுது நமது மனம் இதமாகி மகிழ்ச்சிகரமான சூழலுக்கு சென்று விடுகிறோம்.  அப்படி நம்மை மகிழ்ச்சியான உலகிற்கு கூட்டி செல்லக்கூடிய வகையிலான ஒரு வீடியோவை தான் இப்போது பார்க்க போகிறோம்.

மேலும் படிக்க | தங்கையின் முதல் நடையால் பூரிப்படைந்த குட்டி அண்ணன்: நெட்டிசன்கள் பாராட்டும் வைரல் வீடியோ 

இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் ஒன்றான ட்விட்டரில் Animales y bichitos என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கிறது.  அந்த வீடியோவில் ஒரு மேஜையின் மீது ஒரு பெரிய பூனையும் அதற்கு எதிரே ஒரு பூனைக்குட்டியும் நின்றுகொண்டு இருக்கின்றது.  அந்த குட்டி பூனையானது பெரிய பூனையை மீறி வெளியே செல்ல முயற்சி செய்கிறது, ஆனால் கேட் போட்டது போல பெரிய பூனை குறுக்கே நின்றுகொண்டு குட்டி பூனையை போகவிடாமல் தடுக்கிறது.  அந்த குட்டி பூனையும் வெளியேற எவ்வளவோ முயற்சி செய்கிறது, சண்டை கூட போடுகிறது ஆனால் பெரிய பூனையோ அந்த குட்டி பூனையை விடாமல் அடித்தும் பிடித்து இழுத்தும் அதனை தடுத்து நிறுத்துகிறது.  ஒரு கட்டத்தில் கடுப்பான பெரிய பூனை வேகமாக குட்டிப்பூனையின் தலையில் அடித்தவுடன் அந்த குட்டி பூனை அமைதியாக நின்றுவிடுகிறது.  இந்த காட்சியை அங்கு மற்றொரு மேஜையின் மீது அமர்ந்திருக்கும் ஒரு கருப்பு பூனை பார்த்துக்கொண்டே இருக்கிறது.

 

இந்த வீடியோ பார்ப்பதற்கு நகைச்சுவையாக இருக்கிறது, இதனை கண்டு இணையவாசிகள் பலரும் சிரித்து வருகின்றனர்.  இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ள இந்த வீடியோவை இதுவரை அறுபத்தி எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட இணையவாசிகள் பார்த்து ரசித்துள்ளனர்.  மேலும் இந்த வீடியோவிற்கு பலரும் சிரிப்பு எமோஜிகளை கமெண்ட் செக்ஷனில் நிரப்பி வருகின்றனர்.

மேலும் படிக்க | தங்கையின் முதல் நடையால் பூரிப்படைந்த குட்டி அண்ணன்: நெட்டிசன்கள் பாராட்டும் வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News