ஜம்மு-காஷ்மீரில் குளிர் பருவத்தின் முதல் பனிப்பொழிவைப் பெற்றது, பள்ளத்தாக்கின் பல பகுதிகள் அடர்த்தியான வெள்ளை பனியால் மூடப்பட்டுள்ளன...
பாரமுல்லா மாவட்டத்தின் குல்மார்க் நகரம், சீசனின் முதல் பனிப்பொழிவைப் பெற்றது, பள்ளத்தாக்கில் சுற்றுலா துவங்கும் என்ற நம்பிக்கையைத் தூண்டியது. கடுமையான தடை விதிக்கப்பட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு, சுற்றுலாப் பயணிகள் 370 வது பிரிவு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஜம்முவின் ரம்மியத்தை கடுகளிக்க வருவாய் தருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஜம்மு-காஷ்மீர், இமாச்சல பிரதேச மாநிலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது. பனிப்பொழிவு துவங்கியது. ஸ்ரீநகரில் இந்த பருவத்திற்கான பனிப்பொழிவு நேற்று தொடங்கியதை அடுத்து லால் சவு பகுதியில் உள்ள வீடுகள், மரங்கள், சாலைகள் பனி போர்வைப் போர்த்தியது போல் காட்சியளிக்கிறது. சுற்றுலா தலமாக திகழும் குல்மார்க் மற்றும் சோனமார்க் பகுதிகளிலும் பனி படர்ந்து ரம்மியமாக காட்சியளிப்பதால் சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ரீநகர் விமான நிலையத்திலும் பனிமூட்டம் சூழ்ந்துள்ளதால் விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன.
#WATCH Jammu and Kashmir: Gulmarg in Baramulla district receives snowfall. pic.twitter.com/063IVmisJk
— ANI (@ANI) November 6, 2019
அதிகாலை கடும் பனிமூட்டம் நிலவியதன் காரணமாக இரு விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டன. இதேபோல் இமாச்சல பிரதேசத்தின் சிர்மார் மாவட்டத்தில் உள்ள சுர்தார் பகுதியிலும் கடும் பனிப்பொழிவு நிலவியது. இந்தாண்டு வழக்கத்தைவிட சற்றுமுன்னதாக குளிர் காலத்தில் பனிப்பொழிவு தொடங்கியதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இமயமலையை ஒட்டியுள்ள இமாச்சல, உத்தராகண்ட் மாநிலங்களில் கடும்குளிர் நிலவும் என தெரிவிக்கப்பட்டது.