முகமூடி இல்லை என்றால் என்னவாகும்? திருப்பூர் காவல்துறையின் அடுத்த Video...

முழு அடைப்பு விதிகளை மீறுபவர்களைக் கட்டுப்படுத்துவது காவல்துறைக்கு ஒரு பெரிய தலைவலியாகிவிட்டது. கொரோனாவை கட்டுப்படுத்து முகமூடி அணிவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையிலும், அதன் நோக்கத்தை அறியாமல் இளைஞர்கள் முகமூடி இன்றி வெளியே வருவதும் வாடிக்கையாகிவிட்டது.

Last Updated : Apr 24, 2020, 09:06 AM IST
முகமூடி இல்லை என்றால் என்னவாகும்? திருப்பூர் காவல்துறையின் அடுத்த Video... title=

முழு அடைப்பு விதிகளை மீறுபவர்களைக் கட்டுப்படுத்துவது காவல்துறைக்கு ஒரு பெரிய தலைவலியாகிவிட்டது. கொரோனாவை கட்டுப்படுத்து முகமூடி அணிவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையிலும், அதன் நோக்கத்தை அறியாமல் இளைஞர்கள் முகமூடி இன்றி வெளியே வருவதும் வாடிக்கையாகிவிட்டது.

இவ்வாறு முகமூடி இன்றி வெளியே வரும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் திருப்பூர் காவல்துறை களமிறங்கியுள்ளது. முன்னதாக முழு அடைப்பு விதிகளை மீறி செய்படுவோரை பிடிப்பதற்காக கேமிரா ட்ரோன்களின் உதவியுடன் களமிறங்கிய காவல்துறையினர், தற்போது கொரோனா நோயாளி ஆம்புலன்ஸுடன் மீண்டும் களத்திற்கு திரும்பியுள்ளனர்.

READ | வேட்டி அவிழ்ந்தா என்ன, carrom board வச்சு மறைச்சுபேன்... திருப்பூர் இளைஞனின் Video...

திருப்பூர் மாவட்ட காவல்துறையின் முகப்புத்தக பதிவில் வெளியிடப்பட்ட இந்த வீடியோவில் முக மூடி இன்றி இருசக்கர வாகனத்தில் வரும் மூன்று இளைஞர்களை பிடித்து ஒரு ஆம்புலன்ஸில் காவல்துறையினர் விடுகின்றனர். உள்ளே ஒரு கொரோனா நோயாளி இருப்பது போன்றும், இளைஞர்களை அவர் தொட முயற்சிக்கும் படியும் வீடியோ காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. வீடியோவின் பின் ஓசைகளும், காட்சிகளும் பார்பவர்களை சிறிப்பில் ஆழ்த்தினாலும், முகமூடியின் அத்தியாவசியத்தை மக்களுக்கு இறுதியில் எடுத்துரைக்கிறது.

முகமூடி இன்றி வெளியே வந்தால் கொரோனா தொற்றிக்கொள்ளும் என எச்சரித்தும் முகமூடி இன்றி வீட்டை விட்டு வெளியே வரும் மக்களுக்கு தக்க பாடம் புகட்டும் நோக்கத்தில் மட்டுமே இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக திருப்பூரின் ஊத்துகுளி பகுதியில் வசிக்கும் சில இளைஞர்கள் மரத்திற்கு அடியில் கூடி கேரம் போர்ட் விளையாடுவதை காவல்துறையினர் கண்டறிருந்து, ட்ரோன்களின் உதவியுடன் எச்சரித்தனர். இளைஞர்களை தேடி செல்லும் ட்ரோனை பார்த்து தெறித்து ஓடும் இளைஞர்கள் இடுப்பில் கட்டி இருந்த வேட்டிகள் அவிழ்ந்தாலும் பரவாயில்லை என தலை கால் புரியாமல் ஓடுகின்றனர். குறிப்பாக ஒரு இளைஞன் தங்கள் கேரம் போர்டை கையில் பிடித்து, தலையில் தடுத்து, கேமராவிலிருந்து தப்பிக்க முயல்கிறான். இந்த வீடியோவும் இணையவாசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்ந வரிசையில் தற்போது கொரோனா ஆம்புலன்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது.

Trending News