இன்றைய காலகட்டத்தில், ஒவ்வொரு துறையிலும் தொழில்நுட்பம் மிகவும் முன்னேறியுள்ளது. குறிப்பாக வேளாண் துறையில், பல்வேறு வகையான தொழில்நுட்பங்கள் பின்பற்றப்படுகின்றன. இதனால் விவசாயத்தையும் எளிதாக்கி அதிகபட்ச தானியங்களையும் உற்பத்தி செய்ய முடிகின்றது. விவசாயம் நிலத்தில் மட்டுமே சாத்தியம் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால், அந்த எண்ணைத்தை மாற்றிக்கொள்ளுங்கள். சுவர்களில் விவசாயம் செய்யப்படும் ஒரு நாடு இருக்கிறது. அதைப் பற்றி இங்கே காணலாம்.
செங்குத்து வேளாண்மை என்னும் புதுமை
இங்கே, நெல் மற்றும் கோதுமையுடன், காய்கறிகளும் சுவர்களில் வளர்க்கப்படுகின்றன. இந்த தொழில்நுட்பம் (Technology) படிப்படியாக உலகளவில் பிரபலமாகி வருகிறது. இந்த நுட்பம் செங்குத்து வேளாண்மை, அதாவது சுவர் வேளாண்மை என்று அழைக்கப்படுகிறது.
இஸ்ரேலில் பிரபலமாக உள்ளது செங்குத்து வேளாண்மை
செங்குத்து வேளாண்மை, அதாவது சுவர் விவசாய முறை பிரபலமாக உள்ள நாடு இஸ்ரேல் (Israel). இஸ்ரேல் மற்றும் பல நாடுகளில், சாகுபடி செய்யக்கூடிய நிலங்களின் பற்றாக்குறை உள்ளது. மக்கள் இந்த சிக்கலில் இருந்து விடுபட செங்குத்து விவசாயத்தை ஏற்றுக்கொண்டு அதில் வெற்றியும் கண்டுள்ளனர்.
ALSO READ: பாரம்பரிய விவசாயத்தால் மண்ணை வளப்படுத்திய நம்மாழ்வாருக்கு சத்குருவின் நினைவாஞ்சலி
இஸ்ரேலில் பல சுவர்களில் செங்குத்து விவசாயம் செய்யப்படுகின்றது.
இஸ்ரேலிய நிறுவனமான கிரீன்வாலின் நிறுவனர் கை பார்ன்ஸ் கருத்துப்படி, அவரது நிறுவனத்துடன் கூகிள் (Google) மற்றும் பேஸ்புக் போன்ற பெரிய நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டுள்ளன. அவற்றின் ஒத்துழைப்புடன் இஸ்ரேலில் பல சுவர்களில் செங்குத்து விவசாய தொழில்நுட்பத்துடன் விவசாயம் நடக்கின்றது.
சுவர் சாகுபடி எவ்வாறு செய்யப்படுகிறது?
செங்குத்து விவசாயத்தின் (Agriculture) கீழ், தாவரங்கள் தொட்டிகளில் சிறிய அலகுகளில் நடப்படுகின்றன. அதே நேரத்தில் தாவரங்கள் தொட்டிகளில் இருந்து விழாமல் பார்த்துக் கொள்ளப்படுகின்றன. இந்த தொட்டிகளில் பாசன வசதியும் செய்யப்படுகிறது. இருப்பினும், தானியங்களை வளர்ப்பதற்காக அலகுகள் சுவரில் இருந்து சிறிது நேரம் அகற்றப்பட்டு பின்னர் மீண்டும் சுவரில் வைக்கப்படுகின்றன.
சுவர் சாகுபடி சுற்றுச்சூழலுக்கு சிறந்தது
இஸ்ரேலைத் தவிர, செங்குத்து வேளாண்மை அதாவது சுவர் சாகுபடி தொழில்நுட்பம் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சீனாவிலும் வேகமாக பரவி வருகிறது. இத்தகைய விவசாயத்தின் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், சுவரில் செடிகளை வளர்ப்பது வீட்டின் வெப்பநிலையை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளும். மேலும் அது சுற்றியுள்ள சூழலில் ஈரப்பதத்தையும் பராமரிக்கிறது. இது தவிர, ஒலி மாசுபாட்டின் தாக்கமும் குறைகிறது.
ALSO READ: Siberia-வின் கொடூரக் குளிரில் உறைந்துபோன noodles, viral ஆன post!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR