வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வசதியாக இருக்க, செல்வத்தையும் பெற இரவும் பகலும் கடினமாக அனைவரும் உழைக்கிறோம். ஆனால் பல நேரங்களில், கடின உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்காமல், வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய முடியாமல் போகிறது.
அத்தகைய சூழ்நிலையில், ஒரு நபர் அன்றாடம் கடைபிடிக்க வேண்டிய சில எளிய விஷயங்களை மனதில் வைத்திருந்தால் வீட்டில் செல்வம் என்றனெறு நிலைத்து மகிழ்ச்சியாக வாழலாம். ஒருவரது வீட்டில் செல்வம் பெருகவும், சேர்ந்த செல்வம் கரைந்திடாமல் காக்கவும் குபேரரை வழிபடலாம்.
இந்து மதத்தில், லட்சுமி தேவி மற்றும் செல்வத்தின் கடவுளான குபேர் ஆகியோரை வழிபட்டால் செல்வம் வந்து சேரும் என நம்பப்படுகிறது. சில விஷயங்களைத் தவறாமல் கடைபிப்பதன் மூலம், அன்னை லட்சுமி மற்றும் குபேர கடவுள் ஆகியோரின் அருளைப் பெறலாம். குபேரர் பக்தர்களின் செய்கைகளால் மகிழ்ச்சியடைந்து அவர்களுக்கு செல்வத்தை அள்ளிக் கொடுக்கிறார் என்று நம்பப்படுகிறது. அவர்கள் வாழ்க்கையில் எல்லா வசதிகளையும் பெறுகிறார்கள். உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சி மற்றும் செழிப்புடன் வாழுங்கள். தேவன் குபேரை மகிழ்விக்க, சில எளிய விஷயங்களை செய்தாலே போதும்.
மேலும் படிக்க | ரிஷப ராசிக்குள் நுழையும் சுக்ரன்; குபேரன் ஆகப் போகும் 2 ராசிக்காரர்கள்
குபேரரை மகிழ்விக்க செய்ய வேண்டியவை
குபேரனின் ஆசிகளைப் பெற, நீங்கள் பணம் வைத்திருக்கும் பெட்டகம் அல்லது அலமாரியை வீட்டின் தெற்கு அல்லது தென்மேற்கு திசையில் வைக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் குபேர தேவரின் அருள் நிலைத்திருக்கும்.
பண வரவு அதிகரிக்க, பெட்டகத்தின் முன் ஒரு கண்ணாடியை வைத்தால் நல்லது என்று நம்பப்படுகிறது. பெட்டகம், கண்ணாடியில் பிரதிபலிக்கும் வகையில் வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் ஒருவரின் வருமானம் பெருகும் என கூறப்படுகிறது.
எவரும் சேவைகளை இலவசமாக வழங்கக்கூடாது அல்லது இலவசமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று கூறப்படுகிறது. வேலை வாங்கினால், நிச்சயம் சம்பந்தப்பட்டவருக்கு பணம் கொடுக்க வேண்டும். அதே போல் நாம் ஏதேனும் வேலை செய்தால், அதற்காக உண்டான பணத்தை பெற வேண்டும்.
தவறான வழிகளில் சம்பாதித்த பணம் ஒரு நபரிடம் தங்காது என்று கூறப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், எந்த ஒரு வேலையைச் செய்யும் போதும் இந்த விஷயத்தை எப்போதும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். சத்தியத்துடன் சம்பாதித்த பணமே பலன் தரும்.
ஒவ்வொரு மாதமும் உங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை தொண்டுக்கு, நன்கொடையாக கொடுங்கள். தானங்கள் செய்வதன் மூலம், அன்னை மகா லட்சுமி மற்றும் தன் குபேரின் ஆசீர்வாதம் கிடைக்கும். இதனுடன், மகிழ்ச்சியும் செழிப்பும் ஒரு நபரின் வாழ்க்கையில் இருக்கும்.
வீட்டிலும் வெளியிலும் பெண்களை மதிக்கவும். பெண்கள் லட்சுமி தேவியின் வடிவமாக கருதப்படுகிறார்கள். பெண்களை அவமரியாதை செய்வதால் அன்னை லட்சுமிக்கு கோபம் வரும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | சூரிய பெயர்ச்சி 2022: சரியாக 9 நாட்களில் இந்த ராசிகளின் பொன்னான நாட்கள் ஆரம்பம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR