அடுத்த 3 நாட்களில் இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் தலைகீழாக மாறப்போகிறது

Budhaditya Rajyog in Taurus 2023: வேத ஜோதிடத்தின்படி, ஜூன் 7 ஆம் தேதி அதாவது 3 நாட்களுக்குப் பிறகு, சுக்கிரன் ரிஷப ராசியில் பெயர்ச்சி அடைவார், இதனால் புதன் மற்றும் சூரியனின் சேர்க்கையை உருவாக்கப் போகிறார். புதன் பெயர்ச்சியால் உருவாகும் இந்த கூட்டணி புத ஆதித்ய ராஜயோகத்தை உருவாக்கும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 4, 2023, 07:04 PM IST
  • புத ஆதித்ய ராஜயோகம் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கும்
  • கன்னி ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தரும்.
  • சிம்ம ராசிக்காரர்களுக்கு புத ஆதித்ய ராஜயோகம் மிகவும் சுப பலன்களைத் தரும்.
அடுத்த 3 நாட்களில் இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் தலைகீழாக மாறப்போகிறது title=

ரிஷப ராசியில் புதன் பெயர்ச்சி 2023: ஜூன் மாதம் தொடங்கி நான்கு நாட்கள் முடிந்துவிட்டது, வருகிற 7 ஆம் தேதி ஜூன் 2023 அன்று ஒரு பெரிய கிரகப் பெயர்ச்சி நிகழப் போகிறது. அதாவது சரியாக மூன்று நாட்களுக்குப் பிறகு அதாவது ஜூன் 7 ஆம் தேதி புதன் பெயர்ச்சியாகி ரிஷப ராசிக்குள் பிரவேசிக்கப் போகிறது. இதனிடையே சூரியன் ஏற்கனவே ரிஷப ராசியில் இருக்கிறார், இதன் காரணமாக ரிஷப ராசியில் சூரியனும் புதனும் இணைவதால் புத ஆதித்ய ராஜயோகம் உண்டாகும். மேலும் ஜூன் 15 வரை சூரியன் ரிஷப ராசியில் தான் இருப்பார் அதுவரை இந்த புத ஆதித்ய ராஜயோகம் இருந்து அதன் தாக்கம் 12 ராசிக்காரர்களுக்கு இருக்கும். மறுபுறம், புதன் பெயர்ச்சியால் உருவாகும் புத ஆதித்ய ராஜயோகம் மூன்று ராசிக்காரர்களுக்கு நிறைய பலன்களைத் தரும். இதனால் இந்த மக்கள் செல்வம், மரியாதை மற்றும் கௌரவம் பெற முடியும். இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு புத ஆதித்ய ராஜயோகம் பலமான பலன்களைத் தரும் என்பதை தெரிந்து கொள்வோம்.

புத ஆதித்ய ராஜயோகம் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கும்

ரிஷப ராசி: புதன் பெயர்ச்சியால் உருவாகும் புத ஆதித்ய ராஜயோகம் ரிஷப ராசிக்காரர்களுக்கு நன்மைகளைத் தரும். இந்த புத ஆதித்ய ராஜயோகம் ரிஷப ராசியில் மட்டுமே உருவாகி சாதகமாக பலனைத் தரும். இந்த ராஜயோகம் ரிஷப ராசிக்காரர்களுக்கு பணத்தையும் கொடுத்து பேச்சின் மூலம் ஆதாயத்தை உண்டாக்கும். அதேபோல் எங்கிருந்தாவது திடீரென்று பணம் கிடைக்கும். நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். ஒவ்வொரு செயலிலும் வெற்றி பெறுவீர்கள்.

மேலும் படிக்க | மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகும் சூரியன்..! 4 ராசிகளுக்கு ஜாக்பாட்

கன்னி ராசி: புத ஆதித்ய ராஜயோகம் கன்னி ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தரும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். பணியிடத்தில் நேரம் சிறப்பாக இருக்கும். சில வேலைகளுக்காகவும் பயணம் செய்யலாம். சமய மற்றும் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம். உத்தியோகத்தில் நீங்கள் விரும்பிய வாய்ப்புகளைப் பெறலாம். எதிரிகளும் தோற்கடிக்கப்படுவார்கள்.

சிம்ம ராசி: சிம்ம ராசிக்காரர்களுக்கு புத ஆதித்ய ராஜயோகம் மிகவும் சுப பலன்களைத் தரும். உங்கள் வேலை-வியாபாரம் நன்றாக நடக்கும். வேலைக்கு ஏற்ற நேரம். புதிய வேலை வாய்ப்பு வரலாம். இடம் மாற்றம் ஏற்படலாம். வேலையில்லாதவர்களுக்கு புதிய விரும்பிய வேலை வாய்ப்பு கிடைக்கும். குறிப்பாக வியாபாரிகள் லாபம் அடைவார்கள். சில பரிசோதனைகள் செய்து நல்ல பலனை பெறுவீர்கள். தந்தையிடமிருந்து உதவி கிடைக்கும்.

புத - ஆதித்ய யோகம் என்ன செய்யும்?
ஜோதிட உலகில் பிரமாண்டமாக பேசப்படும் யோகத்தில் ஒன்று புத ஆதித்திய யோகம். பல விதமான கிரகச் சேர்க்கைகள் இருந்தாலும் சூரியன் மற்றும் புதன் இணைவினால் உருவாகும் இந்த யோகம் பலருக்கு கல்வியில், தொழிலில், உத்தியோகத்தில் பொருளாதாரத்தில் மிகப் பெரிய திருப்பு முனையைத் தந்து உள்ளது.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு வரும் 139 நாட்கள் நஷ்டம், கஷ்டம்.. கவனம் தேவை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News