செப்டம்பர் மாதம் இந்த ராசிகளுக்கு ராஜயோகம்: மகிழ்ச்சி பொங்கும், உங்க ராசி என்ன?

Lucky Zodiacs of September: செப்டம்பர் மாத ராசிபலனின் அடிப்படையில் சில ராசிக்காரர்கள் அதிர்ஷ்ட மழையில் நனைவார்கள். பண வரவு அமோகமாக இருக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 25, 2022, 12:12 PM IST
  • தனுசு ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் சிறப்பாக இருக்கும்.
  • கடின உழைப்பின் பலனைப் பெறுவார்கள்.
  • பண ஆதாயங்களால் நிதி நிலை வலுப்பெறும்.
செப்டம்பர் மாதம் இந்த ராசிகளுக்கு ராஜயோகம்: மகிழ்ச்சி பொங்கும், உங்க ராசி என்ன? title=

மாதாந்திர ராசிபலன் செப்டம்பர் 2022: ஒவ்வொரு நபரின் மனதிலும் அவருடைய எதிர்காலத்தைப் பற்றி தெரிந்துகொள்ள ஆர்வம் இருக்கும். செப்டம்பர் மாதம் துவங்க இன்னும் சில நாட்களே உள்ளன. இந்த மாதம் எப்படி இருக்கும்? இந்த மாதம் நமக்கு வெற்றிகளை கொண்டு வருமா, அல்லது தோல்வியைத் தருமா? அதிர்ஷ்டம் இருக்குமா, இருக்காதா? என பல கேள்விகள் நம் மனதில் இருக்கும். இவற்றுக்கான விடையை தெரிந்துகொள்ளும் ஆர்வமும் நம் மனதில் இருக்கும். ஜோதிட சாஸ்திரத்தின் படி, 2022 செப்டம்பர் மாதம் 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். இந்த மாதம் இவர்களுக்கு திடீர் பண ஆதாயத்தையும், அபரிமிதமான வெற்றியும் கிடைக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் செப்டம்பரில் பிரகாசிக்கும்

தனுசு: 

தனுசு ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் சிறப்பாக இருக்கும். கடின உழைப்பின் பலனைப் பெறுவார்கள். பண ஆதாயங்களால் நிதி நிலை வலுப்பெறும். வேலையில் வெற்றி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இந்த காலகட்டத்தில் சொத்து வாங்கும் யோகம் உருவாகலாம். பண விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். இந்த காலத்தில் பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. 

மேலும் படிக்க | செப்டம்பரில் இந்த கிரகங்களின் ராசி மாற்றம், இந்த ராசிகளுக்கு பிரச்சனை

கும்பம்: 

கும்ப ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். இதுவரை தொழிலில் இருந்து வந்த தடைகளும் வெற்றி கிடைப்பதில் இருந்த தாமதமும் இப்போது விலகும். இந்த மாதம் தொழில் முன்னேற்றம் அடையும். வியாபாரிகளுக்கு நல்ல பலன்கள் உண்டாகும். பண வரவு சாதகமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் பாராட்டும் கிடைக்கும். வியாபாரிகள் லாபம் அடைவார்கள். குடும்பத்திலும் அமைதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களால் அனுகூலமான நன்மைகள் உண்டாகும். நீண்ட நாட்களாக காத்திருந்த நல்ல செய்தி கிடைக்கும்.

மீனம்: 

செப்டம்பர் 2022 மீன ராசியினருக்கும் சிறப்பாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் உதவியால் எடுத்த வேலைகள் அனைத்தும் எளிதாக முடிவடையும். வேலை தேடுபவர்கள் மற்றும் வியாபாரிகள் இருவரும் வெற்றி பெறுவார்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். ஏற்கனவே வேலையில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும். இந்த மாதத்தில் செய்யும் முதலீட்டால், எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

பணம், வருமானம் பெருகும். காதல் வாழ்க்கை, திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். கணவன் / மனைவி, குழந்தைகளுக்கு இடையே அன்பு அதிகரிக்கும். வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடிய இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | 1500 ஆண்டுகளுக்குப் பிறகு வந்த சுபநாள்! இன்று குரு புஷ்ய யோகம் தரும் பூச நட்சத்திரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News