Meteorological Temple: மழை வருவது யாருக்கு தெரியும்? இந்த வானிலை கோவிலுக்கு தெரியும்

Temple or Meteorology Predictor: மழை வருவதையும் வானிலையையும் ஒரு வாரத்திற்கு முன்னரே கணிக்கும் கோவில்  

Last Updated : Aug 12, 2022, 12:13 PM IST
  • வானிலை முன்னறிவிப்பு செய்யும் வித்தியாசமான கோவில்
  • மர்மங்கள் நிறைந்த இந்துக் கோவில்
  • மழை வருவதை கணிக்கும் உத்தரப் பிரதேச ஆலயம்
Meteorological Temple: மழை வருவது யாருக்கு தெரியும்? இந்த வானிலை கோவிலுக்கு தெரியும்  title=

வானிலையை கணிக்கும் கோவில்: மழை வருவதை வானிலை மையம் கணித்து செய்திகளைத் தரும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள பெஹ்டா கிராமத்தில் உள்ள கோவில் ஒன்றும் மழை வருவதை கணித்து சொல்லும் என்பது யாருக்கும் தெரியாது. கான்பூரில் உள்ள ஜெகநாதர் கோவில் பிதர்கான் தொகுதியிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலுக்கு தொலைதூரத்தில் இருந்தும் இங்கு வந்து செல்வது வழக்கம். இந்த கோவில் பல ரகசியங்களை தன்னுள் அடக்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.

ஆன்மீக மர்மங்கள் நிறைந்த நாடாக கருதப்படும் இந்தியாவில் இன்றுவரை யாராலும் கண்டுபிடிக்க முடியாத ரகசியங்களை கொண்ட பல கோவில்கள் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ளன. இந்த மர்மங்களைக் கண்டு, வெளிநாட்டவர்களும் ஆச்சரியமடைந்துள்ளனர். ரகசியங்கள் நிறைந்த கோவில்கள் தொடர்பான பல செய்திகளை நீங்கள் கேட்டிருக்கலாம்.

மேலும் படிக்க | சிம்ம ராசியில் நுழையும் சூரியன்; அதிகபட்ச பாதிப்பை சந்திக்கப் போகும் ராசி

கான்பூரின் ஜெகநாதர் கோவில் மழை பற்றிய கணிப்பை வெளியிடும் என்றும், அதுவும் ஒரு வாரத்திற்கு முந்தைய மழைக் கணிப்புகள் துல்லியமாக இருப்பதாகவும் சுற்றுவட்டார மக்கள் தெரிவிக்கின்றனர். பிரசித்தி பெற்ற இந்தக் கோவிலுக்கு வெகு தொலைவில் இருந்தும் மக்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்

இக்கோயில் மழையை முன்கூட்டியே கணிப்பதாக கூறப்படுகிறது. மழை பெய்வதற்கு 6-7 நாட்களுக்கு முன்பாகவே இக்கோயிலின் மேற்கூரையில் இருந்து நீர்த்துளிகள் சொட்ட ஆரம்பிக்கும் என இக்கோயிலைச் சுற்றியுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். ஒரு துளி மழை எந்த அளவில் இருக்கிறதோ, அதே மாதிரியான மழை பெய்யும் என்று கிராம மக்கள் கூறுகிறார்கள்.

மேலும் படிக்க | Astro: ஏழரை நாட்டு சனி பாதிப்பில் இருந்து தப்பிக்க சில எளிய பரிகாரங்கள்

கோவிலில் உள்ள ஜெகநாதர் சிலை

மழை வருவதை கணிக்கும் இந்தக் கோவிலின் மர்மங்கள் இத்துடன் முடியவில்லை. மழை நின்ற உடனே, கோவிலின் மேற்கூரை உட்புறமாக முற்றிலும் காய்ந்து விடுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இக்கோயில் எவ்வளவு பழமையானது என்று இன்றுவரை யாராலும் சொல்ல முடியவில்லை என்கிறார்கள்.

கோயிலின் உள்ளே உள்ள ஜெகநாதர் சிலையில், பகவான் ஸ்ரீ ஹரி விஷ்ணுவின் 24 அவதாரங்களைக் காணலாம். இந்த 24 அவதாரங்களில் கலியுகத்தில் அவதரிக்க இருக்கும் கல்கியின் திருவுருவமும் கோயிலில் உள்ளது.

இந்தக் கோவிலின் குவிமாடத்தில் ஒரு வட்டம் உள்ளது, இதன் காரணமாக இன்றுவரை கோவிலிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மின்னல் தாக்கியதில்லையாம். இந்த மர்மக் கோவிலை கட்டியது யார் என்பதும் மர்மமாகவே உள்ளது.

மேலும் படிக்க | Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News