வக்ர பெயர்ச்சி என்ற ஒன்றே ஜோதிடத்தில் கிடையாது! திடுக்கிட வைக்கும் ஜோதிட உண்மைகள்!

Planets Vakra Peyarchi Wrong Beliefs : வக்ர பெயர்ச்சியா, வக்ர நிவர்த்தியா? நவகிரகங்களுக்கு வக்ரப் பெயர்ச்சி என்ற ஒன்றே ஜோதிடத்தில் கிடையாது! திடுக்கிட வைக்கும் ஜோதிட உண்மைகளை தெரிந்து தெளிவாகுங்கள்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 8, 2024, 04:29 PM IST
  • நவகிரகங்கள் பற்றிய தவறான புரிதல்கள்
  • வக்ர பெயர்ச்சி பலன்கள் சொல்வது சரியா?
  • வக்ர நிவர்த்தி என்பது உண்டா?
வக்ர பெயர்ச்சி என்ற ஒன்றே ஜோதிடத்தில் கிடையாது! திடுக்கிட வைக்கும் ஜோதிட உண்மைகள்! title=

ஜோதிட சாஸ்திரம் என்பது நமது வாழ்க்கையை சூசகமாக சுட்டிக்காட்டும் கண்ணாடி என்று சொல்லலாம். ஆனால், அனைவருக்கும் ஜோதிட அறிவு இருக்குமா என்றால், அது தொடர்பான ஆர்வமும், படிப்பும் இருந்தால் தான் பலன்களை சரியாக சொல்ல முடியும். ஜோதிடம் என்பது நுணுக்கமான அறிவியல் ஆகும். கணக்கீடுகளை சரிவர செய்தால் தான் துல்லியமாக ஜாதகத்தை கணித்து பலன் சொல்ல முடியும்.

இன்றைய தொழில்நுட்ப காலத்தில், ஜோதிட வல்லுநர்கள் தான் ஜாதகம் கணிக்க முடியும் என்ற நிலை மாறி, கம்யூட்டர் கணித்த ஜாதகங்களே அதிகமாக புழங்குகின்றன. இருந்தாலும், அவற்றை சரியாக பார்த்து, பலனை துல்லியமாக சொல்லும் ஜோஷியர்கள் இருக்கிறார்களா என்ற கேள்வியை பலரும் எழுப்புகின்றனர்.

உண்மையில், ஜோதிடத்தையே தொழிலாக வைத்திருப்பவர்கள் கூட, இந்த சாத்திரத்தில் நிபுணத்துவம் பெறுவதில்லை. வாய்க்கு வந்தபடி பலன்களை சொல்லி பணம் சம்பாதிக்கின்றனர். இதுவும் பாவக்கணக்கில் தான் சேரும். ஏனென்றால், ஜோதிடத்தை நம்பி, பலன் கேட்பவர்களுக்கு, பலன்களைச் சொல்லி அதன் அடிப்படையில் முடிவுகளை எடுக்கச் செய்யும் ஜோதிடர்களின் தவறான பலன் சொல்லிவிட்டால், அதன் அடிப்படையில் ஏற்படும் விளைவுகளுக்கு யார் பொறுப்பு? இந்த கேள்வி இன்று பலருக்கும் எழுகிறது.

மேலும் படிக்க | நட்பை பலப்படுத்தும் புதன்-சுக்கிரன் ஃப்ரெண்ட்ஷிப்! லட்சுமி நாராயண யோகத்தின் ஆசி பெறும் ராசிகள்!

நீதி தவறாது செய்த கர்ம வினைகளுக்கு ஏற்ற பலன் தருவார் சனீஸ்வரர் என்று சொல்கிறார்களே, இது ஜோதிடர்களுக்கும் பொருந்தும் அல்லவா? உண்மையில் இன்று பல ஜோதிடர்கள், நவகிரகங்கள் வக்ரம் அடைவது என்பதற்கும், பெயர்ச்சி என்பதற்கும் வித்தியாசமே தெரியாமல் இருக்கின்றனர்.  

’சனி வக்ர பெயர்ச்சி பலன்கள், செவ்வாய் வக்ரம், வக்ர நிவர்த்தி’ என்று சொல்வதை பார்க்கும் பொழுது, ஜோதிடம் என்பதை வெறும் வியாபாரமாக மட்டுமே பார்க்கும் போக்கு இருப்பதாக குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது.

கிரக வக்ரம் என்றால் என்ன?

நவகிரகங்களில் சூரியன், ராகு மற்றும் கேதுவைத் தவிர பிற ஆறு கிரகங்களும் கடிகார சுற்றில் சூரியனைச் சுற்றி வருகின்றன. ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்கள் என்பதும், அவை எப்போதுமே எதிர் திசையில் இயங்கும் கிரகங்கள் ஆகும். சூரியனை மையமாகக் கொண்டே பிற கோள்கள் இயங்குகின்றன. 

இந்த ஏழு கோள்களும் சூரியனை சுற்றி வரும்போது, சில சமயம் மட்டும் எதிர்திசையில் சுற்றத் தொடங்குகின்றன. குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு மீண்டும் அவை தங்கள் நிலையை மாற்றிக் கொண்டு நேர் திசையில் சுற்றுகின்றன. கிரகங்கள் கடிகார சுற்றுக்கு எதிர்திசையில் சூரியனை சுற்றுவதைத் தான் வக்ர கதி இயக்கம் என்று சொல்வோம்.

ஆனால், ஒரு கிரகம் வக்ர கதியில் சுற்றும்போது, வக்ர பெயர்ச்சி என்று சொல்வது தவறானதாகும். ஏனென்றால், தனது செல்லும் பாதையை மாற்றுகிறதே தவிர, ராசியையோ, நட்சத்திரத்தையோ அநத கோள் மாற்றவில்லை என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும். இதுபோல் பல வார்த்தைகளை பிரயோகம் செய்யும்போது, அதன் அடிப்படை அர்த்தம் மாறிவிடுகிறது. 

மேலும் படிக்க | தனுசு ராசியை எதிர்த்தால் அழிவுதான்.. கட்டாயம் பிடிவாத குணமுடன் இருப்பார்களாம்

நம்மால் நவகிரகம் என்று போற்றப்படும் ஒன்பது கிரகங்களும் நமக்கு, ஒவ்வொரு விதத்தில் நன்மைகளை வழங்குகின்றன.  எந்த கிரகம் எதை வழங்குகிறது என்பதைத் தெரிந்துக் கொள்வோம்.

நமது ஆரோக்கியம் மற்றும் தலைமைத்துவத்திற்கு காரணியாக இருந்து செயல்படுபவர் சூரியன் ஆவார். நமது சிந்தனை மற்றும் புகழுக்கு காரணமாபவர், சந்திரன் என்றால், செவ்வாய் எனப்படும் அங்காரகர் பணம், பொருள் என செல்வத்திற்கும், ஒருவரின் வீரத்திற்கும் காரணகர்த்தா ஆவார்.

பேச்சு சாதுரியம், அறிவு, வெளிநாட்டிற்கு செல்லும் யோகத்தைக் கொடுப்பவர் புதன் பகவான் என்றால், குரு பகவான், நல்ல பெயர் வாங்கவும், பிறருக்கு கற்றுக் கொடுக்கும் ஆற்றலையும் நமக்குக் கொடுப்பவர் ஆவார். அழகு, அந்தஸ்து, நல்வாழ்க்கை, ஆடம்பர வாழ்க்கைக்கு சுக்கிரன் பொறுப்பு என்றால், நமது வாழ்க்கையில் மகிழ்ச்சி, ஆயுள் ஆகிய முக்கியமான அம்சங்களுக்கு காரகராகிறார் சனீஸ்வர பகவான்.

திடீர் பண வரவு, செல்வத்தை சேர்ப்பது, பகைவரை கண்டு அஞ்சாத நெஞ்சத்தைக் கொடுப்பது ராகு பகவான் என்றால், கேது பகவான் குல அபிவிருத்திக்குக் காரணமாகிறார்.  

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | ஆடியில் தானம் செய்தால் எதிர்காலம் வளமாகும்! ஆடி மாத சிறப்பு வழிபாடுகள்...

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News