குலதெய்வ அருள்: கேதுவின் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தான் குலதெய்வ ஆசீர்வாதம் இருக்காது. எண் கணிதத்தின் அடிப்படையில் கேதுவின் எண் ஏழு ஆகும். ஏழு என்பது இந்து மதத்தில் மிகவும் முக்கியமானது. அதனால் தான் நம்முடைய பரம்பரையை குறிப்பிடும்போது ஏழு தலைமுறைகள் என்கிறோம் கேதுதான் நம்முடைய முன்னோர்களை குறிக்கும் இடம், அதோடு கேதுவும் ஆன்மீகத்திற்கு காரகத்துவம் ஆன ஒரு கிரகம் என்பது குறிப்பிடத்தக்கது. நவகிரகங்களில் கேது தான் குலதெய்வத்திற்கு காரகத்துவம் ஆன கிரகமாகும்.
அதாவது, ராசி நட்சத்திரம், லக்ன நட்சத்திரம் மற்றும் லக்ன அதிபதி சென்று நின்ற நட்சத்திரம் இந்த மூன்று நட்சத்திரத்தில் ஏதேனும் ஒன்று அஸ்வினி, மகம், மற்றும் மூலம் இந்த மூன்று நட்சத்திரத்தில் ஏதேனும் ஒரு நட்சத்திரத்தில் இருந்தால் அவர்களுக்கு கண்டிப்பாக குலதெய்வ ஆசீர்வாதம் கிடையாது. குலதெய்வ சாபம் இவர்களுக்கு இருக்கின்றது என்று அர்த்தம்.
மேலும் படிக்க | வார ராசிபலன்: இந்த வாரம் எப்படி இருக்கு? யாருக்கு சூப்பர், யாருக்கு சுமார்?
இந்த மூன்று நட்சத்திரத்தை சேர்ந்தவர்கள், பிறப்பதற்கு முன் இவர்கள் பரம்பரையில் குலதெய்வத்தை சரியாக வணங்கவில்லை என்று கூறப்படுகிறது. குலதெய்வத்தை விட்டிருக்கிறார்கள் அல்லது குலதெய்வ கோயிலுக்குச் செல்லாமல் இருந்திருக்கிறார்கள் என்று அர்த்தம்.
அப்படி இருந்தால்தான் இவர்கள் "அஸ்வினி, மகம், மூலம்" என்ற கேதுவின் நட்சத்திரத்தில் பிறப்பார்கள். குலதெய்வ ஆசீர்வாதம் விட்டுப்போன குடும்பத்தில் தான் இதுபோன்ற நட்சத்திரத்தில் குழந்தைகள் தொடர்ந்து பிறந்து கொண்டே இருப்பார்கள்.
வெறும் ராசி நட்சத்திரத்தை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது லக்ன புள்ளி மற்றும் லக்ன அதிபதி நின்ற நட்சத்திரத்தையும் நாம் பார்க்கவேண்டும். ஒருவர் பிறந்த லக்னம் மேஷ லக்னம் என்றால், இவருடைய லக்ன புள்ளி அதாவது லக்னம் விழுந்த டிகிரி நட்சத்திரம் அஸ்வினி நட்சத்திரம் ஆக இருந்தாலும் இவர்களுக்கு குலதெய்வம் ஆசீர்வாதம் கிடையாது என்று புரிந்துக் கொள்ளலாம்.
மேலும் படிக்க | கிரக பெயர்ச்சி 2022: அடுத்த 4 மாதங்கள் ‘இந்த’ ராசிகளுக்கு ஜாக்பாட் தான்
அதே போன்று ஒருவர் சிம்ம லக்னத்தில் பிறந்திருந்து, அவர்களுடைய லக்ன புள்ளி அதாவது லக்னம் விழுந்த டிகிரி நட்சத்திரம் "மகம்" நட்சத்திரம் ஆக இருந்தாலும் இவர்களுக்கு குலதெய்வம் ஆசீர்வாதம் கிடையாது.
மொத்தத்தில் இந்த ராசி நட்சத்திரம் லக்னம் புள்ளி விழுந்த நட்சத்திரம் மற்றும் லக்னாதிபதி நின்ற நட்சத்திரம் இந்த மூன்றில் ஏதாவது ஒன்று "அஸ்வினி,மகம் அல்லது மூலம்" இந்த நட்சத்திரத்தில் இருந்தால் அவர்களுக்கு கண்டிப்பாக குலதெய்வ ஆசிர்வாதம் இல்லை என்று சொல்லலாம். குலதெய்வ சாபம் குலதெய்வ தோஷம் இவர்களுக்கு இருக்கின்றது என்று அர்த்தம்.
சரி, குலதெய்வத்தின் அருளைப் பெறாதவர்களும், அஸ்வினி, மகம், மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் எப்படி தெய்வத்தை சாந்திப்படுத்துவது? அதற்கு பரிகாரங்கள் இல்லையா? என்ற கேள்விகள் எழும்.
கடவுளை வழிபாடு செய்வதும், வாழ்க்கையில் செய்யும் நன்மைகளுமே பரிகாரம் வேறு. எனவே குல தெய்வத்தை வழிபட்டு, பரிகாரத்தை தொடர்ந்து செய்து வாருங்கள். வாழ்வில் குலதெய்வத்தின் அருள் இருந்தால், தொட்டதெல்லாம் துலங்கும், மனம் நிம்மதியாக இருக்கும்.
மேலும் படிக்க | சூரியன் சுக்கிரன் சேர்க்கை: அடுத்த 15 நாட்களுக்கு இந்த ராசிகளுக்கு ராஜயோகம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEata