புதுடெல்லி: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் (England vs India, 4th Test) போட்டி ஓவல் மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்குகிறது. இந்தியா 1971 இல் இங்கு ஒரு வரலாற்று வெற்றியைப் பெற்றது, இதன் மூலம் இந்திய அணி முதல் முறையாக இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வென்றனர். இந்தியா இந்த மைதானத்தில் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளது. ஐந்து போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. ஏழு போட்டிகளை டிரா செய்துள்ளது.
பேட்டிங் செய்ய நல்ல ஆடுகளம்:
ஓவலில் (Oval Stadium) உள்ள ஆடுகளம் பேட்டிங் செய்ய மிகச்சிறந்த மைதானமாகும். இந்த டெஸ்ட் தொடரில் ரன்கள் அடிக்க போராடும் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும். இந்திய அணியின் தொடக்க வீரர்களான முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் சில ரன்களை அடிக்க முடிந்தது. இருப்பினும், எண் 4, 5 மற்றும் 6 இல் உள்ள பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து ரசிகர்களை ஏமாற்றி வருகிறார்கள்.
ஏமாற்றம் அளித்த கோஹ்லி:
4 வது இடத்தில் பேட்டிங் செய்யும் கேப்டன் கோஹ்லி ரன்கள் எடுக்க போராடுகிறார், அதே நேரத்தில் அஜிங்கியா ரஹானே 5 வது இடத்திலும், ரிஷப் பந்த் 6 வது இடத்திலும் உள்ளனர். இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம், அணியின் பேட்டிங்கை வலுப்படுத்த இஷாந்த் சர்மாவுக்கு பதிலாக ஆல்-ரவுண்டரான ஷர்துல் தாக்கூரை களம் இறக்கலாம் எனத் தெரிகிறது.
ALSO READ | காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜடேஜா!
அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்கும்:
ரவீந்திர ஜடேஜாவின் உடற்தகுதி குறித்து சில கவலைகள் உள்ளன. அவருக்கு பதிலாக ரவிச்சந்திரன் அஷ்வினை அணி நிர்வாகம் கொண்டு வரலாம். ஆடும் 11 பேர் கொண்ட அணியில் அஸ்வினை சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் அணி உள்ளது. இங்கிலாந்து அணியில் இருந்து ஜோஸ் பட்லர் வெளியேறியதால் 11 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும்.
டெஸ்ட் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது:
லீட்ஸ் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இவ்வாறான சூழ்நிலையில், டெஸ்ட் தொடரில் முன்னிலை பெற நான்காவது போட்டியில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியம். பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா புதன்கிழமை வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், அணி நிர்வாகத்தின் வேண்டுகோளின் பேரில் அகில இந்திய மூத்த தேர்வுக் குழு, நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் பிரமக் கிருஷ்ணாவை சேர்த்துள்ளது.
ALSO READ | 4வது டெஸ்டில் களமிறங்கும் கிறிஸ் வோக்ஸ்! இந்திய அணிக்கு பின்னடைவா?
இரண்டு அணிகளின் விவரம் பின்வருமாறு:
இந்தியா: ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், மயங்க் அகர்வால், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி (இ), அஜிங்க்யா ரஹானே (விசி), ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த் (வி.கே), ரவிந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், ஜஸ்பிரித் பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், விருத்திமான் சாஹா (அபி), அபிமன்யு ஈஸ்வரன், பிருத்வி ஷா, சூர்யகுமார் யாதவ் மற்றும் பிரபல கிருஷ்ணா.
இங்கிலாந்து: ஜோ ரூட் (கேப்டன்), மொயீன் அலி (துணை கேப்டன்), ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜொனாதன் பேர்ஸ்டோ, ரோரி பர்ன்ஸ், சாம் பில்லிங்ஸ், சாம் கரேன், ஹசீப் ஹமீட், டேன் லாரன்ஸ், டேவிட் மாலன், கிரேக் ஓவர்டன், ஒல்லி போப், ஒல்லி ராபின்சன், மார்க் மர கிறிஸ் வோக்ஸ்.
ALSO READ | பழி தீர்த்தது இங்கிலாந்து அணி! இன்னிங்ஸ் தோல்வி அடைந்த இந்தியா!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR