இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், விராட் கோலியின் வயது மற்றும் உடற்தகுதி குறித்த கவலைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு, நட்சத்திர வீரர் கோலி தனது பார்மிற்கு திரும்ப அவர் செய்ய வேண்டியதைச் செய்கிறார் என்று கூறியுள்ளார். நவம்பர் 2019 முதல் சர்வதேச கிரிக்கெட்டில் கோஹ்லி சதம் அடிக்கவில்லை, இது கோலிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. தான் போட்டியில் வெற்றி பெறும் பங்களிப்புகளை மட்டுமே கோலியிடம் இருந்து விரும்புவதாகவும், அது சதங்கள் வடிவில் இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும், கோலியின் ஃபார்ம் பிரச்சனை இல்லை என்றும் டிராவிட் கூறியுள்ளார்.
மேலும் படிக்க | இந்திய அணிக்கு பயம்காட்டிய அயர்லாந்து அணிக்கு குவியும் பாராட்டு
"விராட் கோலி தனது 30வது வயதில் தவறான பக்கம் இருக்கிறார் என்பதை நான் ஒத்துக்கொள்ள மாட்டேன். அவர் 30 வயதில் சரியான பக்கம் இருக்கிறார் என்று நான் கூறுவேன். விராட் அசுர தகுதி உள்ள ஒரு பேட்டர், நான் இதுவரை கண்டிராத கடின உழைப்பாளிகளில் அவர் ஒருவர். ஒவ்வொரு போட்டிக்கும் அவர் போடும் உழைப்பு எண்ணிலடங்காதது. தற்போது நடந்த பயிற்சி ஆட்டத்தில் கூட கோஹ்லி 33 மற்றும் 67 ரன்களை எடுத்தார். ஒவ்வொரு வீரருக்கும் அவரது கரியரில் கடினமான ஒரு நிலை வரும். அதை கடந்து தான் செல்ல வேண்டும். மிகவும் நேர்மையாக இருக்க உங்களுக்கு உந்துதல் தேவையில்லை என்று நான் நினைக்கிறேன்.
சில சமயங்களில் நீங்கள் நன்றாக பேட்டிங் செய்தால் போதும், சதத்தை பற்றி கவலை பட வேண்டியது இல்லை. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவின் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் போது கேப்டவுனில் கோஹ்லி 79 ரன்கள் எடுத்திருந்தார். இது போட்டிக்கும் முக்கியமான ரன்கள்" என்று 5வது டெஸ்ட் போட்டிக்கும் முன்னதாக நடந்த செய்தியாளர் சந்திப்பில் டிராவிட் கோலியை பாராட்டினார். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.
மேலும் படிக்க | துணி விற்கும் சர்வதேச முன்னாள் கிரிக்கெட் நடுவர் - பிசிசிஐ மீது கடும் விமர்சனம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR