மும்பை - கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியில் ரோகித் சர்மாவுக்கு அவுட் கொடுக்கப்பட்ட முடிவு தவறு என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். மும்பை - கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டி மும்பை டி.ஓய் பாட்டீல் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி, 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. வெங்கடேஷ் ஐயர் மற்றும் நிதிஷ் ராணா ஆகியோர் சிறப்பாக விளையாடினர்.
மேலும்படிக்க | டெல்லி அணிக்கு ஷாக்! நட்சத்திர வீரர் மருத்துவமனையில் அனுமதி
இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரின் கடைசி பந்தை ரோகித் சர்மா லெக் சைடில் பிளிக் செய்ய முயற்சித்தார். அந்த பந்தை கேட்ச் பிடித்த விக்கெட் கீப்பர் மற்றும் பவுலர் டிம் சவுத்தி ஆகியோர் முறையிட, கள நடுவர் நிராகரித்துவிட்டார்.
Umpiring this season has been so poor #IPL2022 #MumbaiIndians #MIvsKKR pic.twitter.com/hgnC1UJJMu
— Shubham (@Shubham_rambhia) May 9, 2022
ஆனால், இந்த முடிவை ஏற்காத கொல்கத்தா அணி மூன்றாவது நடுவரிடம் அப்பீல் செய்தது. ரீப்ளேவில் பார்க்கும்போது அல்ட்ரா எட்ஜில் ஸ்பைக் தெரிகிறது. ஆனால், பேட்டிற்கும் பந்துக்கும் இடையே இடைவெளியும் இருக்கிறது. குழப்பமான சூழல் ஏற்பட்டதால், 3வது நடுவர் அவுட் என்ற முடிவை அறிவித்தார். அப்போது, களத்தில் இருந்த ரோகித் சர்மாவும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
Clearly a technical glitch. Spike popped up before the ball reached Rohit's bat. Important for the third umpire to keep the eyes open. #IPL2022 #MIvKKR pic.twitter.com/hfsfMvPb1m
— Subhayan Chakraborty (@CricSubhayan) May 9, 2022
தற்போது மூன்றாவது நடுவரை மும்பை ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். ஸ்பைக் இருந்தாலும், பேட்டிற்கும் பந்துக்கும் இடையே இடைவெளி இருப்பது கிளியராக தெரியும் நிலையில் அம்பயர் எப்படி அவுட் கொடுக்கலாம்?, இது சரியான முடிவா? என விமர்சிக்கின்றனர். கள நடுவரால் தான் தவறு ஏற்படுகிறது என்றால், 3வது நடுவரும் இப்படி அவுட் கொடுப்பது வேடிக்கை என்றும் சாடியுள்ளனர். இப்போட்டியில் மும்பை வீரர்கள் யாரும் நிலைத்து நின்று விளையாடதாதால் 51 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. வெற்றி பெற்ற கொல்கத்தாவுக்கு பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கிறது.
மேலும் படிக்க | பதற்றத்தில் பேட்டை கடித்து சாப்பிடும் தோனியின் புகைப்படம் வைரல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR