ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலக கோப்பை போட்டி இறுதிக் கட்டத்தை எட்டத் தொடங்கியிருக்கிறது. பல்வேறு சுவாரஸ்யங்களுக்கு மத்தியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த தொடரின் 2வது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது. இந்தியாவில் இருக்கும் 100 கோடிக்கும் மேலான கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு செல்ல வேண்டும், அங்கு பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை மீண்டும் வெல்ல வேண்டும் என்ற பேராசையில் இருக்கின்றனர்.
ஆனால், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரான சோயிப் அக்தர் இந்திய அணி மீது வயிற்றெரிச்சலில் பேசியிருக்கிறார். அவர் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது அரையிறுதிப் போட்டி குறித்து கருத்து தெரிவிக்கும்போது, இந்திய அணி இங்கிலாந்து அணியிடம் தோல்வியடையும் என தெரிவித்துள்ளார். இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடி இந்திய அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறும், இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் தான் இறுதிப் போட்டியில் மோதும் என ஆருடம் கூறியுள்ளார்.
மேலும் படிக்க | IND vs ENG Semifinal: மழை வந்தால் இந்தியா பைனலுக்கு தகுதியா?
அவரின் இந்த கருத்துக்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சரியான பதிலடியை கொடுத்து வருகின்றனர். இந்திய அணி சிறப்பாக விளையாடி 20 ஓவர் உலக கோப்பையில் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்றும் தெரிவித்துள்ளனர். இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது அரையிறுதிப் போட்டி அடிலெய்டு மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய அணியை பொறுத்தவரை 20 ஓவர் உலக கோப்பை தொடங்கப்பட்ட 2007 ஆம் ஆண்டு முதன்முறையாக கோப்பையை வென்றது. அதன்பிறகு கோப்பையை வெல்லவில்லை. இந்த முறை கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி உத்வேகத்துடன் இருக்கிறது.
மேலும் படிக்க | Haris Rauf: ஹரீஸ் ரவூஃப் பிறந்த நாளில் பிராங் செய்த ஷாகீன் அப்ரிடி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ