Harmanpreet Kaur Viral Video: இந்திய பெண்கள் அணி மற்றும் வங்கதேச பெண்கள் அணி இடையேயான ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் கடைசி போட்டி டாக்காவில் உள்ள ஷேரே பங்களா தேசிய மைதானத்தில் நேற்று (ஜூலை 22) நடைபெற்றது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த வங்கதேசம் 4 விக்கெட்டுக்கு 225 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ஃபர்கானா ஹோக் 107 ரன்களை எடுத்தார். இந்திய அணி தரப்பில் சினே ராணா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணி 49.3 ஓவர்களில் 225 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட்டாக, போட்டி சமனில் முடிந்தது. இதன்மூலம், மூன்று போட்டிகள் கொண்ட தொடரும் 1-1 என்ற கணக்கில் சமன் அடைந்தது. மூன்றாவது போட்டியில், இந்திய பெண்கள் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரின் செயல் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஸ்டம்பை தாக்கிய ஹர்மன்பிரீத்
அந்த போட்டியில், இந்திய பெண்கள் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நடுவர் மீது கடும் கோபப்பட்ட சம்பவம் தான் விவாதத்தை கிளப்பியுள்ளது. போட்டி முடிந்த பின்னர் நடைபெற்ற நிகழ்விலும் நடுவரை அவர் விமர்சித்தார். நஹிதா அக்தரின் பந்தில் ஹர்மன்பிரீத் கேட்ச் அவுட் ஆனதாக நடுவர் அறிவித்தார். இருந்தாலும் பந்து அவரது கால்-பேடில் பட்டு ஸ்லிப் பீல்டரிடம் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் நடுவரின் முடிவில் ஹர்மன்ப்ரீத் கவுர் அதிருப்தி அடைந்தார். நடுவரின் இந்த முடிவுக்குப் பிறகு ஹர்மன்ப்ரீத் ஸ்டம்பை தாக்கி தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். அதன் வீடியோ சமூக ஊடகங்களில் பெருகிய முறையில் வைரலாகி வருகிறது. ஹர்மன்பிரீத் பெவிலியின் நோக்கி நடந்துசென்றுகொண்டிருந்தபோது நடுவரிடம் ஏதோ சொன்னார்.
மேலும் படிக்க | அயர்லாந்து டி20 லீக்கில் பும்ரா: சூர்யகுமார் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு
விளையாட தடையா?
ஹர்மன்ப்ரீத் கவுர் இப்போது போட்டிக் கட்டணக் கழிப்புடன், ஓரிரு போட்டிகளில் விளையாட தடை விதிப்பின் அபாயத்தில் உள்ளார். குறிப்பாக, வீரர்கள் கோபத்தில் போட்டி உபகரணங்களை தவறாக பயன்படுத்த முடியாது என்பது ஐசிசியின் நடத்தை விதிகளில் தெளிவாக உள்ளது. நடுவரின் முடிவுக்கு எதிராக அதிருப்தி காட்டவும், போட்டி அதிகாரிகளுக்கு எதிராக பகிரங்க அறிக்கைகளை வெளியிடவும் வீரர்கள் தடைசெய்யப்பட்டுள்ளனர். இதுபோன்ற சூழ்நிலையில், ஹர்மன்ப்ரீத்தின் இந்த செயல்பாடுகள் மற்றும் அறிக்கைகள் குறித்து போட்டி நடுவர் ஐசிசிக்கு என்ன அறிக்கை அளிக்கிறார் என்பதை பொறுத்துதான் அவர் மீதான நடவடிக்க தெரியவரும்.
நடுவர் தீர்ப்பு குறித்து அதிருப்தி
போட்டிக்கு பிறகு ஹர்மன்பிரீத் கூறுகையில், 'இந்த தொடரில் இருந்து நாங்கள் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். கிரிக்கெட்டைத் தவிர, நடுவர் செயலாற்றும் விதம் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அடுத்த வங்கதேச சுற்றுப்பயணத்தில், இதுபோன்ற விஷயங்களுக்கு (மோசமான நடுவர்) தயாராக வர வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இந்திய துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனாவுடன், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரும் மூன்றாவது பெண்கள் ஒருநாள் போட்டியில் வங்கதேச நடுவர்கள் முகமது கம்ருஸ்ஸாமான் மற்றும் தன்வீர் அகமது ஆகியோரின் நடுவரை விமர்சித்தார். இது குறித்து மந்தனா கூறுகையில், 'சிறந்த அம்பயரிங்கை நாங்கள் எதிர்பார்த்தோம். சில முடிவுகளில் அது தெளிவாகத் தெரிந்ததால் சில முடிவுகளில் சிறந்த நடுவர் தரநிலைகள் தேவைப்பட்டன" என்றார்.
மேலும் படிக்க | IND vs PAK: மருத்துவமனைகளை புக் செய்யும் ரசிகர்கள்! ஏன் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ