IND vs AFG: மீண்டும் இந்திய அணியில் விராட் கோலி! இந்த 3 வீரர்களின் இடங்களுக்கு ஆப்பு!

India vs Afghanistan 2nd T20: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2வது டி20 போட்டி இன்று இந்தூரில் நடைபெறுகிறது.  இந்த அணியில் விராட் கோலி தற்போது இணைந்துள்ளார்.    

Written by - RK Spark | Last Updated : Jan 14, 2024, 12:07 PM IST
  • இன்று நடைபெறும் 2வது டி20 போட்டி.
  • விராட் கோலி விளையாட உள்ளார்.
  • இந்தூரில் போட்டி நடைபெற உள்ளது.
IND vs AFG: மீண்டும் இந்திய அணியில் விராட் கோலி! இந்த 3 வீரர்களின் இடங்களுக்கு ஆப்பு!  title=

India vs Afghanistan 2nd T20 Playing 11: ஜனவரி 14 இன்று ஞாயிற்றுக்கிழமை இந்தூரில் நடைபெறும் இரண்டாவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது இந்திய அணி.  இந்த போட்டியில் வெல்லும் பட்சத்தில் இந்தியா இந்த தொடரை வென்றுவிடும்.  இந்திய அணி முதல் ஆட்டத்தை மிகவும் எளிதாக வென்று இருந்தது.  மொஹாலியில் நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் டி20யில் ஷிவம் துபேவின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா வென்றது.  2வது போட்டியில் இந்திய சூப்பர் ஸ்டார் விராட் கோலி 14 மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக டி20 அணியில் இந்தியாவிற்காக விளையாட உள்ளார்.  கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக முதல் போட்டியில் விளையாடவில்லை. இந்நிலையில், இந்த போட்டியில் திலக் வர்மாவுக்குப் பதிலாக 3வது இடத்தில் களமிறங்க உள்ளார். 

மேலும் படிக்க | திலக் வர்மாவுக்கு அடுத்த போட்டியில் இடம் கிடைக்குமா?

மேலும் முதல் போட்டியில் இடுப்பு வலி காரணமாக இடது கை ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அணியில் இடம் பெறவில்லை.  அவருக்கு பதில் கில் இடம் பெற்று இருந்தார்.  கேப்டன் ரோஹித் சர்மாவை ரன் அவுட் செய்தாலும், 12 பந்துகளில் 23 ரன்களை எடுத்து இருந்தார் ஷுப்மான் கில்.  2வது போட்டியில் கில்லுக்கு பதிலாக ஜெய்ஸ்வால் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும் பவுலிங்கிலும் இந்தியா மாற்றம் செய்ய உள்ளது.  மொஹாலி பெரிய மைதானம் என்பதால், இந்தியா மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடியது.  ஆனால் இந்தூர் சிறிய மைதானம் என்பதால், அவேஷ் கான் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  அக்சர் படேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் சுழற்பந்து வீச்சாளர்களாக இருக்கலாம்.  முதல் ஆட்டத்தில் ஷிவம் துபே ஆல்ரவுண்டராக சிறப்பாக விளையாடியதால் சஞ்சு சாம்சன் அணியில் இடம் பெறுவது கேள்விக்குறி ஆகி உள்ளது.  

2வது போட்டியில் மழை வருமா?

இந்தூரில் நாள் முழுவதும் மழை பெய்ய வாய்ப்பில்லை என்பதால், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே இன்றைய போட்டி ஹோல்கர் ஸ்டேடியத்தில் எந்த தடையும் இல்லாமல் நடைபெறும்.  மொஹாலியில் கடும் குளிரைச் சமாளிக்க வீரர்கள் சிரமப்பட்டனர். இந்த மைதானத்தில் இரவு நேரத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை சுமார் 10 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்பதால் வீரர்கள் சற்று நிம்மதி அடைவார்கள்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2வது டி20 போட்டிக்கான கணிக்கப்பட்ட இந்திய அணி:

ரோஹித் ஷர்மா(கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷிவம் துபே, ஜிதேஷ் சர்மா, ரிங்கு சிங், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய்/அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார்

மேலும் படிக்க | விராட் கோலி கடந்த ஆண்டில் மட்டும் இத்தனை சாதனைகளா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News