IND vs AUS: வெள்ளிக்கிழமை டெல்லி நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்டில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் மீண்டும் இணைந்தார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாக்பூரில் பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடக்க ஆட்டத்திற்கு சில நாட்களுக்கு முன்னதாக ஐயரை பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு (என்சிஏ) பிசிசிஐ அனுப்பியது. முதுகில் ஏற்பட்ட காயத்திற்குப் பிறகு ஐயர் மீண்டும் அணிக்கு திரும்புகிறார். ஏற்கனவே நியூசிலாந்து ஒருநாள் போட்டிகளில் இருந்தும் அவர் நீக்கப்பட்டு இருந்தார். இது தொடர்பாக பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது: “ஸ்ரேயாஸ் ஐயர் முதுகில் ஏற்பட்ட காயத்தைத் தொடர்ந்து தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனது மறுவாழ்வை வெற்றிகரமாக முடித்துள்ளார், மேலும் பிசிசிஐ மருத்துவக் குழுவால் விடுவிக்கப்பட்டுள்ளார்".
: Shreyas Iyer to join India squad for Delhi Test. #TeamIndia | #INDvAUS
Details https://t.co/0KtDRJYhvg
— BCCI (@BCCI) February 14, 2023
பார்டர்-கவாஸ்கர் டிராபிக்கான மாஸ்டர்கார்டு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக புதுதில்லியில் ஷ்ரேயாஸ் அணியில் இணைவார். ஐயர் இப்போது ஒரு மாதத்திற்கும் மேலாக விளையாடவில்லை, ஆனால் அவரது வருகை இந்திய அணிக்கு மிடில்-ஆர்டரில் பலம் வாய்ந்ததாக இருக்கும். முதல் டெஸ்டில் ஐயர் இல்லாததால், டி20 ஸ்பெஷலிஸ்ட் சூர்யகுமார் யாதவை மிடில் ஆர்டரில் களம் இறங்க நிர்வாகம் வாய்ப்பளித்தது. தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த ஐயர் போலல்லாமல், சூர்யகுமார் நாதன் லயன் பந்தில் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
ஸ்ரேயாஸ் ஐயர் டெஸ்ட் மற்றும் 50-ஓவர் வடிவத்தில் இந்திய அணிக்கு முக்கிய வீரராக இருந்து வருகிறார். இதுவரை ஏழு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஐயர் 7 ஆட்டங்களில் 624 ரன்கள் குவித்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பரில் பங்களாதேஷுக்கு எதிரான இந்தியாவின் கடைசி டெஸ்ட் தொடரின் போது கூட, இரண்டு போட்டிகளிலும் 80-க்கும் அதிகமான ரன்கள் அடித்துள்ளார். குறிப்பாக அவர் டாக்கா டெஸ்டின் நான்காவது இன்னிங்ஸில் எட்டாவது விக்கெட்டுக்கு அஷ்வினுடன் முக்கியமான 71 ரன்களை அடித்தார், இதன் மூலம் இந்தியா இக்கட்டான நிலையில் இருந்து மீண்டு 145 ரன்களை அடித்து கிளீன் ஸ்வீப் செய்தது.
NEWS - Jaydev Unadkat released from India’s squad for 2nd Test to take part in the finals of the Ranji Trophy.
More details here - https://t.co/pndC6zTeKC #TeamIndia pic.twitter.com/8yPcvi1PQl
— BCCI (@BCCI) February 12, 2023
இதற்கிடையில், வியாழன் அன்று ஈடன் கார்டனில் நடைபெறும் பெங்கால் அணிக்கு எதிரான ரஞ்சி டிராபி இறுதிப் போட்டியில் சவுராஷ்டிரா அணிக்காக விளையாட, பிசிசிஐ ஜெய்தேவ் உனட்கட்டை அணியில் இருந்து விடுவித்தது. தொடக்க ஆட்டத்தில் இந்தியா ஆதிக்கம் செலுத்தி ஆஸ்திரேலியாவை இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த மூன்று நாட்களுக்குள் போட்டியை முடித்தது. இப்போது இரண்டாவது டெஸ்டில் வேகத்தை முன்னெடுத்துச் செல்ல விரும்புகின்றனர், அதே நேரத்தில் பேட் கம்மின்ஸின் ஆஸ்திரேலியா திருப்பி அடிக்க காத்துக்கொண்டுள்ளது.
இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), ஷுப்மன் கில், சேட்டேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எஸ்.பாரத், இஷான் கிஷான், ஆர். அஷ்வின், அக்சர் படேல். , குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது. ஷமி, முகமது. சிராஜ், உமேஷ் யாதவ், சூர்யகுமார் யாதவ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ