India Vs Australia: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டி நாக்பூரில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இந்திய அணிக்கு இந்த போட்டி மிக முக்கியமான போட்டியாகும். அதாவது "செய் அல்லது செத்து மடி" என்ற வரிக்கு ஏற்ப களத்தில் இந்திய வீரர்கள் போராட வேண்டியிருக்கும். ஏனென்றால் மொஹாலியில் நடந்த முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி தோல்வியடைந்துள்ளது. முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த டி20 தொடரை வெல்ல வேண்டுமானால், நாக்பூரில்நடக்கும் இரண்டாவது போட்டி மற்றும் ஹைதராபாத்தில் நடக்கும் மூன்றாவது டி20 போட்டி என தொடர்ந்து இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற வேண்டும்.
சமீபாகாலமாக புவனேஷ்வர் குமாரரின் பந்து வீச்சு எதிர்பார்த்தது போல இல்லை என்று கிரிக்கெட் வல்லுனர்கள் மற்றும் ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை பதிவு செய்து வருகின்றனர். அவரின் பந்து வீச்சு சரியில்லாததால் பெரும்பாலான போட்டிகளில் இந்திய அணி தோல்வியை தழுவி வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில், புவனேஷ்வர் குமார் சொதப்பியதால் இந்திய அணி தோல்வியடைந்தது. இந்நிலையில், இரண்டாவது டி20 போட்டியில் விளையாடும் லெவன் அணியில் இருந்து புவனேஷ்வர் குமாரை கேப்டன் ரோஹித் சர்மா நீக்கவுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில், வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக இருந்தார். புவனேஷ்வர் குமார் 4 ஓவர்களில் 52 ரன்கள் விட்டுக்கொடுத்தார். ஒரு விக்கெட் கூட புவனேஷ்வர் குமார் எடுக்கவில்லை. முதல் டி20 போட்டியில் புவனேஷ்வர் குமார் பவுலிங் சுக்குநூறாகப்பட்டது. இதுபோன்ற மோசமான பார்மில் இருக்கும் புவனேஷ்வர் குமாருக்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வாய்ப்பு கிடைப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.
மேலும் படிக்க: ரோஹித் சர்மாவின் கேப்டன்சி மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள்!
இரண்டாவது டி20 போட்டியில், புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹரை விளையாடும் லெவன் அணியில் கேப்டன் ரோஹித் சர்மா சேர்க்கலாம். ஏனெனில் சமீபத்திய ஆசிய கோப்பையிலும் புவனேஷ்வர் குமாரின் மோசமான பந்துவீச்சால் இந்திய அணி தொடரில் இருந்து வெளியேறியது. புவனேஷ்வர் குமாரின் மோசமான பந்துவீச்சால், இந்த ஆண்டு ஆசியக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி நுழைய முடியவில்லை.
தீபக் சாஹர் இந்திய அணிக்காக 9 ஒருநாள் மற்றும் 21 டி20 போட்டிகளில் விளையாடி முறையே 15 மற்றும் 26 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தீபக் சாஹர் பவர்பிளேயில் கூர்மையான ஸ்விங் பந்துவீச்சிற்கு பெயர் பெற்றவர். புதிய பந்தில் விக்கெட்டுகளை வீழ்த்துவதில் தீபக் சாஹர் கைதேர்ந்தவர். எனவே இவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் எனத் தெரிகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணியில் ஆடும் வீரர்களின் பட்டியல் (கணிப்பு மட்டுமே)
ரோஹித் சர்மா (கேப்டன்)
கேஎல் ராகுல்
விராட் கோலி
சூர்யகுமார் யாதவ்
ஹர்திக் பாண்டியா
தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்)
அக்சர் படேல்
ஆர் அஸ்வின்
ஹர்ஷல் படேல்
தீபக் சாஹர்
ஜஸ்பிரித் பும்ரா
மேலும் படிக்க: Rohit Sharma: ரோகித் சர்மாவுக்கு தலைவலியாக மாறிய இந்த வீரர் அணியில் இருக்க மாட்டார்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ